Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த எம்பி

 திருச்சி தொகுதியில், திருச்சி மாநகரில், கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இன்று (23.05.2025) காலை 10:30 மணியளவில் நடைபெற்ற தனியார் தொழில் நிறுவன வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கி வைத்து, நேர்முகத் தேர்வு நடக்கும் இடங்களைப் பார்வையிட்டேன். நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடி அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தேன்.

இப்படி வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சிகள் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் குறிப்பாகக் கிராமப்புறங்களுக்குச் சென்று சேருவதில்லை. அதனைக் கருத்தில் கொண்டு இந்தச் செய்தி சென்று சேர்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் நான் என் அலுவலகத்தை ஈடுபடுத்துவேன் என்று கூறினேன். வேலைவாய்ப்பு குறித்து என் அலுவலகத்தில் ஒரு அறிவிப்புப் பலகையை நிறுவுவதற்கும் ஏற்பாடு செய்கிறேன். இதனால் எனது அலுவலகத்திற்கு வரும் மக்களின் வழியாக வேலை தேடும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்குத் தகவல் சென்று சேரும் என்று கூறினேன்.

அந்த அலுவலகத்தில் இரண்டாவது மாடியில் நடைபெற்றுக் கொண்டிருந்த போட்டித் தேர்வர்களுக்கான இலவசப் பாட மற்றும் பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவர்களிடம் கலந்துரையாடினேன்.அப்போது அவர்களின் முக்கிய கோரிக்கைகளான, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விடுமுறை நாட்களிலும் அலுவல் நேரம் முடித்ததும் பூட்டப்படுவதால், மாலை நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் கழிவறையை பயன்படுத்த முடியவில்லை.

அதனால் அலுவலகத்தின் வெளிப்புறம் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனிக் கழிவறை கட்டித்தரவேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைத்தல், சீருடைச் சேவைக்கான பயிற்சியில் உள்ளவர்களுக்கு எடை அளவிடும் கருவி (weighing machine) ஆகியவற்றை கேட்டிருந்தனர். இதனை அவசியம் நிறைவேற்றித் தருவதாகக் கூறினேன்.அப்போது அவர்கள் முன் உரையாற்றும்போது, கல்விக்கான அவசியத்தை எடுத்துரைத்ததுடன்,

படிப்பறிவில்லாத பெற்றோர்கள் தரும் அழுத்தங்களைக் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தேன். முழு முயற்சியுடன் தேர்வில் பங்கேற்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல ஏதேனும் தடைகள் வரும்போது மனம் தளர்ந்து விடக்கூடாது என்று அறிவுறுத்தினேன்.முயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு இருந்தால் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்று பேசினேன்.அதன்பின், மாணவர்களுக்கு இலவசப் பாட நூல்களை (study materials) வழங்கி வாழ்த்தினேன்.நிகழ்ச்சியின் முடிவில், இன்றைய வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று நிறுவனங்களின் வேலைக்கான

ஆணையைத் தேர்வானவர்களுக்கு வழங்கி வாழ்த்தினேன்.அப்போது, ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் குறைந்தது இரண்டு ஆண்டுகள் அந்தப் பணியில் தொடர வேண்டும். அனுபவங்களைப் பெற்றுத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுருத்தினேன்.திரு. ரமேஷ் குமார், துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அவர்கள் உடனிருந்தார்.இந்த நிகழ்வில் கழக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்

 வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் டி.டி.சி. சேரன், தலைவர் வைகோ அவர்களின் உதவியாளர் வே அடைக்கலம், ஏர்போர்ட் பகுதி செயலாளர் வினோத், உறையூர் பகுதி செயலாளர் ஆசிரியர் முருகன், மார்கெட் பகுதி செயலாளர் மனோகரன் மற்றும் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *