Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி ஜி கார்னரில் விரைவில் வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதை அமைக்க திட்டம் எம்.பி தகவல்

Black Spot எனப்படும் கருப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி G – கார்னர் பகுதியை விபத்தில்லா பகுதியாக மாற்றும் எனது தொடர் முயற்சியில் இன்றைய சந்திப்பு.

இன்று மதுரை கோட்ட அலுவலகத்தில், தேசிய நெடுஞ்சாலை துறை மண்டல அலுவலர் திரு. கோவிந்தராஜன் அவர்களையும், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் திரு. பிரவீன் குமார் அவர்களையும் சந்தித்து பேசினேன். மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருச்சி பொன்மலை G கார்னர் பகுதியில், காலகாலமாக ஏற்பட்டு வரும் விபத்துகளை, உயிர்பலிகளை, போக்குவரத்து சிக்கல்களை முழுவதுமாக நிவர்த்தி செய்வதற்கு உரிய ஒரே தீர்வாக, அந்தப் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் தீவிர மற்றும் தொடர் பணியில் நான் கவனம் செலுத்தி வருவதை எடுத்துரைத்தேன். 

தொடக்கமாக, கடந்த 01.10.2024 அன்று திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கை மனுவை அளித்திருந்ததையும்,அதன் அடிப்படையில், கடந்த  11.01.2025 அன்று நடைபெற்ற DISHA இரண்டாவது கூட்டத்தில் G – கார்னர் பகுதியில் சுரங்கபாதை அமைப்பது தொடர்பாக விரிவாக எடுத்துரைத்து பேசியதையும் கூறினேன். அடுத்தப்படியாக, கடந்த (25.01.2025) அன்று தென்னக இரயில்வே அதிகாரிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து, இதற்கான தீர்வு எட்டப்பட வேண்டிய வழிவகைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டதையும். 

 அப்போது எனது கோரிக்கையை ஏற்று தேசிய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தயாரித்துவந்த சுரங்கப்பாதைக்கான திட்ட வரைபடத்தை, இரயில்வேத் துறை அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டி, இதுவரை NHAI அதிகாரிகள் வழங்கிக்கொண்டிருக்கும் ஒத்துழைப்பிற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டேன். அதன் பிறகு முக்கிய நகர்வாக  ஒன்றிய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களை, 06.02.2025 அன்று டெல்லியில் அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, இதுகுறித்த எனது கோரிக்கை கடிதத்தை வழங்கி, அதை அவசரமாக நிறைவேற்றித்தரவேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்ததுடன், திட்டம் தயாரிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றையும் விரைந்து முடித்து, கட்டுமானப் பணிகளை தொடங்கிட வழிவகை செய்திடுமாறும் கேட்டுக்கொண்டதையும் பதிவு செய்தேன். 

அதற்கு பிறகு, இன்று, உங்களை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு, G கார்னர் பகுதியில் (Vehicle Under Pass – VUP) எனப்படும் வாகனச் சுரங்கப் பாதை அமைக்க தேவையான கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.அனைத்தையும் கேட்டு உள்வாங்கிக்கொண்ட அவர், நிச்சயம் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.விரைவில், திருச்சி G – கார்னர் பகுதியில் வாகன சுரங்கப்பாதை கட்டப்பட்டு, கருப்பு பகுதி என்ற பெயர் நீங்கி, அது விபத்தில்லா பகுதியாக மாறும் என்று நம்புகிறேன். என்று துரைவைகோ அவர்கள் கூறினார்.

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *