கல்லகம் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் காரணமாக சமுதாய நலக்கூடம் கையகப்படுத்தி முழுமையாக அகற்றப்பட்டு விட்டதால் கல்லகம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சமுதாய நலக்கூடம் புதிதாக கட்டித் தரவும் கல்லகம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு செல்வதற்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் இப் பகுதியில் உள்ள கைலாசநாதர் திருக்கோயில் திருப்பணிகளுக்கு நிதி உதவி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை எம்டி பாரிவேந்தரிடம் ஊராட்சி மன்ற தலைவர் முரசொலி மாறன் மற்றும் பொதுமக்கள் வழங்கினர்.

கல்லகம் ஊராட்சி பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்ட பாரிவேந்தர் எம் பி பொதுமக்களிடம் கூறியது
இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை இல்லை என கூறினர் ஆகையால் விரைவில் திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவமனை சார்பில் இந்த கல்லகம் பகுதியில் புதிதாக ஒரு எஸ்ஆர்எம் மருத்துவமனை கிளை அமைத்து தரப்படும் எனவும் கல்லகம் ஊராட்சியில் உள்ள கைலாசநாதர் திருக்கோயில் திருப்பணி வேலைகளுக்காக எனது சொந்த செலவில் ரூபாய் பத்து லட்சம் விரைவில் வழங்க உள்ளேன் என்றும் இப்பகுதியில் வங்கி வசதி இல்லை என்ற மனுவிற்கு மத்திய நிதியமைச்சரிடம் பேசிய விரைவில் இப் பகுதியில் வங்கி கிளை அமைத்தது தருவேன் என உறுதி கூறுவேன் எனவும் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்க கல்லகம் குண்டக ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளினர். ஆனால் ஏரியினை சீரமைக்க வில்லை எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

இது தொடர்பாக தமிழக முதல்வரிடமும் தொகுதி அமைச்சரிடம் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கிறேன் என கூறினார்..
மேலும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி மக்களின் 50 ஆண்டுகால கனவு திட்டமான அரியலூர் பெரம்பலூர் நாமக்கல் வரையிலான 108 கிலோ மீட்டர் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தினை செயல்படுத்திய தீருவேன் என பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி எம்பி பாரிவேந்தர் செய்தியாளர்களிடம் கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments