108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசிவிழாக விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 30ம்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் மணல் வெளியில் இன்று காலை நடைபெற்றது.
அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பட்டாச்சார்யார்கள், ஆலயத்தினரின் முன்னிலையில் முகூர்த்தக்கால் பூஜிக்கப்பட்டு பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்கிட முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
வைகுண்ட ஏகாதசியானது பகல்பத்து, இராப்பத்து என 21நாட்கள் நடைபெறும் விழாவில் டிசம்பர் 31ம்தேதி முதல் பகல்பத்து திருவிழா தொடங்கி (09.01.2025) தேதி வரையும் நடைபெறுவதுடன், ஜனவரி 9ம்தேதியன்று மோகினி அலங்காரமும், முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு வைபவம் ஜனவரி 10ம் தேதி அதிகாலை 5:15 மணிக்கு நடைபெறுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments