திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கூறியதற்கு அரசியல் கட்சிகள் எது வேண்டுமானாலும் சொல்லுவார்கள் செயலில் காண்பிப்பது திமுக அரசு என திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேட்டி.
மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்க படாது. சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் இரண்டும் பயன்பாட்டில் தான் இருக்கும்.
நகரப் பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படும் மேலும் கரூர் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் செல்லும் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
நகரப் பேருந்துகள் அனைத்தும் மத்திய பேருந்து நிலையம் வந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.தற்போதைக்கு திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு நகர,புறநகர பேருந்துகள் சேவையில் கட்டணம் மாற்றம் இல்லை என தெரிவித்தார்.
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் நிற்பதற்கு தற்போதைக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து பயணிகளை ஏற்றி புறப்பட்டு செல்ல வேண்டும்.சத்திரம் பேருந்து நிலையம் மத்திய பேருந்து நிலையம் ,பஞ்சப்பூர். பேருந்து நிலையம் மூன்றும் செயல்படும் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments