Wednesday, September 24, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஜாதி மாறி காதல் திருமணம் கொலை – அண்ணண் தம்பிக்கு ஆயுள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம். முசிறி காவல் உட்கோட்டம். முசிறி காவல் நிலைய குற்ற எண் . 132/24 U/s 294(b). 307 IPC @ 294(b), 114, 324, 302 IPC வழக்கில் முசிறி, புது கள்ளர் தெருவை சேர்ந்த ராஜேஷ் 30/24 த.பெ ஞானசேகர் (வன்னியர்) என்பவர் அதே தெருவில் வசித்து வரும் கள்ளர் சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதன் முன்விரோதம் காரணமாக முசிறி காவல் நிலைய சரித்திர பதிவேடு ரவுடிகளான எதிரிகள்

1) செந்தில் முருகன் 28/24 த.பெ மருதை, புது கள்ளர் தெரு, முசிறி, 2) வேல்முருகன் 26/24 த.பெ மருதை, -do- ஆகியோர் 17.05.2024-ம் தேதி மேற்படி ராஜேஷ் மற்றும் அவரது சகோதரர் சரவணன் ஆகியோர் தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது. மேற்படி எதிரிகளில் வீட்டின் அருகே வைத்து ராஜேஷை அருவாளர் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 05.06.2024-ம் தேதி இறந்துவிட்டார். ,

இவ்வழக்கு விசாரணையானது திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் (PDJ) நடைபெற்று வந்த நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞராக திரு.சவரிமுத்து ஆஜராகி வாதிட்டு வந்தார். இந்நிலையில் இன்று (23.09.2025) திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி திரு.கிறிஸ்டோபர் (PDJ) அவர்கள் எதிரி 1) செந்தில் முருகன் 28/24 த.பெ மருதை மற்றும் எதிரி 2) வேல்முருகன் 26/24 த.பெ மருதை ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய். 1000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக முசிறி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. செல்லதுரை, நீதிமன்ற காவலர்கள் திரு.நடராஜ் மற்றும் திருமதி.கிருத்திகா ஆகியோரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *