Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா – அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இன்று (02.02.2026) நடைபெற்ற விழா நிகழ்வில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி, பள்ளிக்கு நிலம் வழங்கிய குடும்பம், புரவலர்கள் மற்றும் 10ம் வகுப்பு,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆகியோரை பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் ந.தியாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பாலாஜி, முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா, முதன்மைக் கல்வி அலுவலர் கோ,கிருஷ்ணப் பிரியா, மாவட்டக் கல்வி அலுவலர் முருகேசன் முசிறி நகர் மன்றத் தலைவர் கலைச்செல்வி சிவக்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் லு.பல்த்தாசர், ஆசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *