திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோட்டாத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செங்குட்டுவன். இவரது மனைவி சுகுணாதேவி. வீட்டை பூட்டிவிட்டு மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் நடைபெற்ற உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.

பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 7 பவுன் நகையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து சுகுணா தேவி துறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments