திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நகர்நல சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் மீது நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் சில மர்மநபர்கள் கற்களை வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் இந்த சம்பவத்தால் அந்த மையத்தில் பணியில் இருந்த செவிலியர்கள், சிகிச் சைக்கு வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி, ஜன்னல் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் நகர்நல மையத்தின் கண்ணாடியை சிலர் கல்வீசி தாக்கி உடைத்ததாகவும், தற்போது இது தொடர் கதையாகி வருவதால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments