திருச்சியில் உள்ள ராயல் சாலை மற்றும் லாசன்ஸ் சாலைக்கு கார்கில் வீரர் மேஜர் சரவணனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மேஜர் சரவணன் பெயரை திருச்சியில் உள்ள ஒரு சாலைக்கு வைக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் ராயல் ரோடு , எம்ஜிஆர் சிலை மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள லாசன்ஸ் ரோடு இரண்டிற்கும் மேஜர் சரவணன் சாலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு சாலைகளை இணைத்து ஒன்றரை கிலோ மீட்டர் அளவிற்கு மேஜர் சரவணன் சாலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டு இந்திய எல்லையின் கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்திய படைகள் விரட்டி அடித்தன. அப்போது இந்திய ராணுவத்தின் கார்கில் பகுதியில் மேஜர் ஆக பணியாற்றிய திருச்சியை சேர்ந்த சரவணன் வீரமாக போராடி எதிரிகள் பலரை அழித்தார். இந்த போரில் இந்திய ராணுவம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றிருந்தாலும் மேஜர் சரவணனை இழந்தது. எல்லை காக்கும் போரில் மரணம் அடைந்த மேஜர் சரவணனின் வீரம், உயிர் தியாகத்தை பாராட்டி அவருக்கு மிக உயரிய ‘வீர் சக்ரா’ என்ற விருது வழங்கப்பட்டது.
மேஜர் சரவணன் திருச்சியை சேர்ந்தவர் என்பதால் அவரது வீரத்தை போற்றும் வகையில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் தமிழக அரசின் சார்பில் நினைவு சதுக்கம் அமைக்கப்பட்டு உள்ளது.தற்போது திருச்சியில் உள்ள சாலைக்கு மேஜர் சரவணன் பெயரை சூட்டி மேலும் அவருக்கு பெருமை சேர்த்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், இது கொஞ்சம் கொஞ்சமாக சாலைகளின் பெயர்கள் அரசு பதிவேடுகளில் மேஜர் சரவணன் சாலை என்று பெயர் மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments