108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பு வாய்ந்த வைகுந்த ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் 19ஆம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 20ஆம் தேதி பகல் பத்து விழா தொடங்கியது.
இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான 30 ஆம் தேதி இன்று அதிகாலை 4.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது
இதனை அடுத்து ராப்பத்து உற்சவத்தின் 3ம்நாளான இன்று நம்பெருமாள் முத்து கொண்டையுடன் கிளி பச்சை வர்ண பட்டு உடுத்தி மூலஸ்தானத்தில் இருந்து 12 மணிக்கு புறப்பட்டு 1 மணிக்கு பரமபத வாசலை கடந்து திருக்கொட்டகைக்கு சென்று பின்னர் ஆயிரங்கால் மண்டபத்திற்கு சென்றடைந்தார்.
இன்று இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானம் செல்வார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments