தேசிய குத்துச்சண்டை போட்டி 2023, திருச்சி தேசிய கல்லூரி, டி மீடியா மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி மெட்ரோ இணைந்து நடத்தும் அகில இந்திய தொழில் முறை குத்துச்சண்டை போட்டி (16.07.2023) அன்று மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் டெல்லி, பஞ்சாப், அரியானா, குஜராத், உத்தரகாண்ட், கேரளா, கர்நாடகா, மராட்டியா, ஆந்திரா உள்பட 12 மாநிலங்களில் இருந்து 38 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அகில இந்திய தொழில்முறை குத்துச்சண்டை சங்கம் முறைப்படி நடத்தினர்.
தமிழகம் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி இரண்டாம் ஆண்டு உடற்கல்வி பயிலும் மாணவரான எபினேசர், டெல்லியின் நவீன் மிஸ்ராவை எதிர்த்து போட்டியிட்டார். தொடக்க சுற்றில் அவரை தோற்கடித்தார். 60 கிலோ பிரிவில் தனது நாக் அவுட் மூலம் வெற்றி பெற்றார்.
விழாவில் தேசிய கல்லூரி முதல்வர் முனைவர் குமார், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி மெட்ரோ செயலாளர் பிரகாஷ், முனைவர். குணசீலன், உருமு தனலட்சுமி உடற்கல்வி இயக்குநர் முனைவர் சிவகுமார், அகில இந்திய குத்துச்சண்டை தலைவர் பிரிகேடியர் முரளிதரன் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments