Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தேசிய வண்ணத்துப்பூச்சி நாள்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு வனத்துறையின் கீழ் இயங்கும், திருச்சிராப்பள்ளி மண்டலம், திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் வன உயிரினம் மற்றும் பூங்கா சரகத்திற்கு உட்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்காவானது 25 ஏக்கர் பரப்பளவில் காவேரி மற்றும் கொள்ளிடம் என்னும் 2 ஆறுகளுக்கு இடையே அமைக்கப்பட்டு, சுமார் 450க்கும் மேற்பட்ட தாவரங்களும் 131 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்களும் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேசிய வண்ணத்துப்பூச்சி பற்றிய கற்றல் நாள் 14.03.2026ம் தேதியை (National Learn about Butterfly Day) முன்னிட்டு, இன்று இத்தினத்தை நினைவு கூறும் வகையாக காலை சுமார் 10.00 மணியளவில் A காஞ்சனா வனப்பாதுகாவலர், திருச்சி அவர்களின் ஆலோசனையின் பேரில் S.கிருத்திகா மாவட்ட வன அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேலூரில் அமைந்துள்ள அய்யனார் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காதர் பாஷா, உதவி வனப்பாதுகாவலர் மினி உயிரியல் பூங்கா, திருச்சி அவர்களின் தலைமையில், வனச்சரக அலுவலர் M.ஜனனி அவர்கள் முன்னிலையில் மற்றும்

வனப்பணியாளர்களுடன் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வண்ணத்துப்பூச்சிகளின் முக்கியத்துவம் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தும், “பல்லுயிர் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும், “சுற்றுசூழல் பன்முகத்தன்மை” என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும், “வண்ணத்துப்பூச்சிகள்” என்ற தலைப்பில் கதைக்கூறுதல் போட்டியும் நடத்தப்பட்டது.

இதில் ஏரானமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு சான்றிதழும், பரிசுகளும் உதவி வனப்பாதுகாவலர் அவர்களால் வழங்கப்பட்டது.

மேலும் மாணவர்களை உற்சாக படுத்தும் நோக்கில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களது குடும்பத்தோடு வண்ணத்துப்பூச்சி பூங்காவில இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக கடந்த மாதம் வண்ணத்துப்பூச்சி பூங்கா பாதுகாப்பகத்திற்கு பார்வையிட வந்த 200 பள்ளிகளில் இருந்து சுமார் 15000 மாணவர்களுக்கு வண்ணத்துப்பூச்சி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது என்பது மாவட்ட நிர்வாகம் பெருமையாக கருதுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *