Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தேசிய அறிவியல் தினம் வாழை ஆராய்ச்சி மையத்தில் கொண்டாட்டம்

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தேசிய அறிவியல் தினத்தைக் கொண்டாடியது.திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் “அறிவியல் மற்றும் புதுமைகளில் இளைஞர்களின் தலைமைத்துவம் – வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற கருப்பொருளுடன் தேசிய அறிவியல் தினத்தை 28 பிப்ரவரி 2025 அன்று கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 5,000 மாணவர்கள், 400 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 இந்த நிகழ்வு, குறிப்பாக வாழை ஆராய்ச்சியில் சமீபத்திய அறிவியல் முன்னேற்றங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.தன் தலைமை விருந்தினர் உரையில் முனைவர் வி.ஏ.பார்த்தசாரதி, முன்னாள் இயக்குநர், ICAR-IISR கோழிக்கோடு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் ஸ்ரீனிவாச ராமானுஜன் போன்ற புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் அறிவியலுக்கு ஆற்றிய தொண்டுகளை பற்றி எடுத்துரைத்தார். மாணவர்கள் புதுமையான சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முதன்மை விஞ்ஞானி டாக்டர் வி.ஜி.மாலதி, தனது கௌரவ விருந்தினர் உரையில் இந்தியாவின் அறிவியல் பாரம்பரியம், ஸ்டெம் செல் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் மரபணு எடிட்டிங்கில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பேசினார்.முனைவர் இரா. செல்வராஜன் இயக்குனர், தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி தனது தலைமை உரையில் தேசிய அறிவியல் தினக் கருப்பொருள் இந்தியாவின் அறிவியல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மிகவும் பொருத்தமானது என்று வலியுறுத்தினார்

இளம் மாணவர்களின் நினைவுகளை அறிவியல் மனப்பான்மைக்கு ஊக்குவிப்பதில் சர் சி.வி. ராமனின் பங்களிப்புகளையும் அவர் எடுத்துரைத்தார். பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் வருடத்தில் ஒரு முறை தன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தொழில்நுட்பங்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஒருங்கிணைத்திருப்பார்கள். அந்த வகையில் வாழை ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக 3வது வருடம் இந்த நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்துள்ளது. இந்த வருடம் சுமார் 5000 பேர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியானது திருச்சி வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளது என்றால் மிகையாகாது என குறிப்பிட்டார். அலுவலகம் மற்றும் ஆராய்ச்சி பண்ணை இரண்டிலும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பார்வையாளர்களின் நலனுக்காக சுமார் 60 அறிவியல் கருத்துக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் கண்காட்சியில் பல்வேறு வாழை வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

மையத்தின் ஆராய்ச்சி பண்ணையில் உள்ள பொது உணவு பதனிடும் மையம், ஆசியாவின் மிகப்பெரிய வாழை மரபணு வங்கி மற்றும் பல்வேறு ஆராய்ச்சி பண்ணைகளை அனைத்து மாணவர்களும் பார்வையிட்டனர். ICAR-NRCB தொழில்நுட்பங்களின் வீடியோ படங்கள் மாணவர்களுக்காக திரையிடப்பட்டன. NRCB விஞ்ஞானிகளால் தொழில்நுட்ப வகுப்பும் நடத்தப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் முனைவர் குரு அரங்கநாதன், TNAU, திருச்சி ஓய்வுபெற்ற வேளாண் விரிவாக்கப் பேராசிரியர் நிபுணர் உரையை நிகழ்த்தி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வு முனைவர் எம்.எஸ். சரஸ்வதி, முதன்மை விஞ்ஞானி வரவேற்புரை வழங்கினார். டாக்டர் சி. கற்பகம், முதன்மை விஞ்ஞானி (விரிவாக்கம்) மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நன்றியுரையை வழங்கினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *