திருச்சி ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளியில் தேசிய அறிவியல் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு வினாடி வினா போட்டி நடைபெற்றது.இப்போட்டியானது இரண்டு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலும் மற்றும் ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலும் போட்டிகள் நடைபெற்றன.
இதில் நான்காம் வகுப்பு ஜனனி ஐந்தாம் வகுப்பு ஹரி ஆறாம் வகுப்பு சத்யன் ஆகியோர் முதலிடமும், நான்காம் வகுப்பு ஸ்ருதி ஐந்தாம் வகுப்பு சஞ்சித் ஆறாம் வகுப்பு மதுஸ்ரீ ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர்.
இரண்டாவது பிரிவில் எட்டாம் வகுப்பு நிதேஸ்வரன், எட்டாம் வகுப்பு டீனா மற்றும் ஒன்பதாம் வகுப்பு ஃபேலின் ஆகியோர் முதலிடமும், ஏழாம் வகுப்பு அர்ஷிகா, ஏழாம் வகுப்பு ஜீவன் பிரணவ் மற்றும் ஒன்பதாம் வகுப்பு ஈஸ்வர்யா ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர்.
மேலும் பரிசு வென்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை முதல்வர் தயானந்தன் வழங்கினார்
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           133
133                           
 
 
 
 
 
 
 
 

 29 February, 2020
 29 February, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments