நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களுக்கு ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் துவக்க நிகழ்வு மார்ச் 31ம் தேதியன்று கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுகந்தி தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில், 63 வது வார்டு கவுன்சிலர் பொற்கொடி, கலைஞர் நகர் பகுதி செயலாளர் ஜி மணிவேல், 64 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மலர்விழி,வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன், ஆஸ்ட்ரோ கிளப் நிறுவனர் பாலபாரதி மற்றும் முனைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நான்கு அலகு மாணவர்களும் தனித்தனியே பிரிந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடித்தனர். கல்லூரியின் சின்னத்தின் வாசகமான நூலினைப் பகுத்துனர் என்ற வரிக்கு ஏற்ப மாவட்ட மைய நூலகத்தில் துணை நூலகமான ஐயப்பன் நகரில் அமைந்துள்ள நூலகத்தில் உள்ள 24 ஆயிரம் நூல்களை எண்கள் வாரியாக பிரித்து அடுக்கி கொடுத்தனர்.பெண்கள் பிரிவிற்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் கல்பனா தேவி வழிநடத்தினார்.

மாணவர்கள் பிரிவின் அலகு ஒன்று, முனைவர் பாலமுருகன் தாவரவியல் துறை பேராசிரியர் வழிநடத்தினார் மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டும், ஓவியங்கள் வரைந்து மாணவர்களின் கைவண்ணத்தால் கவி பாரதி நகர் பூங்கா பல வண்ணங்களில் மின்னியது. அலகு இரண்டிற்கு முனைவர் நோபல் ஜெபக்குமார் வழிகாட்டுதலின்படி தங்கையா நகர் பூங்காவை மாணவர்கள் தூய்மைப்படுத்தி மரக்கன்றுகளை நட்டும் அழகு வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தினார்கள்.

அலகு மூன்றிற்கும் முனைவர் பால முருகன் வழிநடத்திட பாரதிநகர் பூங்காவில் மாணவர்கள் தூய்மை செய்து விழிப்புணர்வு வாசகங்களை எழுதியும் ஓவியங்கள் திட்டியும் அழகுப்படுத்தினார்கள். முகாமில் 6-வது நாளாக ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மணப்பாறை அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் நோயியல் மருத்துவர் புவனா முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர். ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு ஒரு தலைப்புகளில் பேராசிரியர்கள் சிறப்பு அழைப்பாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றது. ஏழு நாட்கள் சிறப்பு முகாமில் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தனித்துவத்தையும் வெளிப்படுத்தினர் முகாமில் 200 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

6ஆம் தேதியன்று (புதன்கிழமை) நிறைவு விழா நடைபெற்றது.இவ்விழாவில் பாரதிதாசன் பல்கலை கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குமி பிரபா கலந்துகொண்டார். தந்தை பெரியார் கல்லூரி முதல்வர் முனைவர் சுகந்தி, சிவசண்முகம், மணிவேல், பொற்கொடி மற்றும் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO