29.8.2025 அன்று இந்திய ஹாக்கியின் ஜாம்பவான் என்று போற்றப்பட்ட மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்தநாளையொட்டி தேசிய விளையாட்டு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி, இந்திய தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு (PEFI),BNI Emperor, ரோட்டரி அமைப்புகளான,DC bride,Trichy butterfly மற்றும் ROTARY CLUB OF TRICHY DIAMOND CITY ELITE ஆகியவை இணைந்து மாபெரும் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வினை திருச்சிராப்பள்ளி காவிரி மேம்பாலத்தில் அரங்கேற்றினர்கள்.
தேசியக் கல்லூரியைச் சார்ந்த ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற இம்மாபெரும் மனித சங்கிலியை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார் இம் மனித சங்கிலியில் பதாகைகளை ஏந்தி தேசியக் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சிறந்த பதாகைகளுக்கு அமைச்சர் முன்னிலையில் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இம்மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேசியக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் முத்துராமகிருஷ்ணன், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்ற இம்மாபெரும் விளையாட்டு நாள் விழா விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நிகழ்வினை தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments