தேசிய வாக்காளர் தினத்தையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொது மேலாளர் ஆ.முத்துகிருஷ்ணன் தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி இன்று (25.01.2025) எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் ஜூலியஸ் அற்புத ராயன் (வழித்தாள் வசூல்), ரவி ( பணியாளர் மற்றும் சட்டம் ) மற்றும் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதே போன்று கலைக்காவிரி நுண் கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்ட ஜனவரி 25ஆம் நாளை தேசிய வாக்காளர் தின நாளாக கடைபிடிக்கப்படுகிறது .
இந்நிகழ்வை முன்னிட்டு கல்லூரியில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி லூயிஸ் பிரிட்டோ, முதல்வர் முனிவர் ப. நடராஜன் உள்ளிட்ட இருபால் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் வளாகப் பணியாளர்கள், அனைவரும் பங்கேற்று வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் வாக்களிப்பதனால் தேசத்தின் வளர்ச்சி 18 வயது நிறைவடைந்த மாணவர்களின் அடிப்படை கடமை எதிர்கால இந்தியாவினுடைய மேன்மை யாவும் வாக்களிப்பதின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. வாக்களிப்பது என்பது இந்தியாவினுடைய மாண்பை வளர்ப்பது மாண்பை போற்றுவது மாண்பை உயர்த்துவது என்று கல்லூரியின் செயலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments