Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

அழகு சாதனங்களுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் இயற்கை பொருட்கள்

லிப் க்ளாஸ், பாடி லோஷன், ஷாம்பு என நாம் பயன்படுத்தும் செயற்கையான அழகு சாதனப் பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான பெண்களும் தங்களை தினம் தினம் பளபளப்பாக அலங்காரம் செய்து கொள்ள இந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இவற்றில் கலக்கப்பட்டுள்ள ரசாயனப் பொருட்களை நீண்ட காலம் பயன்படுத்தும் போது, நமது தோலுக்கு எந்தவிதமான நற்பயன்களும் விளைவதில்லை.

நமது தோலை மற்றும் தலைமுடியை மேம்படுத்தும் வகையில் இயற்கை நமக்கு சில பொருட்களை கொடுத்துள்ளது. இவை ரசாயனங்கள் இல்லாத, இயற்கையான பொருட்களாகும். எனவே, நாம் தினந்தோறும் பயன்படுத்தும் செயற்கை அழகு சாதனங்களுக்கு மாற்றாக, அவற்றை விட பன்மடங்கு செயல்திறன் வாய்ந்த இயற்கையான அழகு சாதனப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதனை விற்பனை செய்து வருகிறேன் என்கிறார் திருச்சியை சேர்ந்த ஐஸ்வர்யா ..

எம்பிஏ முடித்த பின்பு தனியார் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன் எனினும் அந்த வேலையின் மீது அதிக ஆர்வம் இல்லை தொழில் தொடங்கி ஒரு தொழில் முனைவராக வேண்டும் என்று எண்ணத்தால் அதற்காக பல்வேறு திட்டங்கள் இருந்தாலும் இயற்கை சார்ந்த ஏதேனும் செய்ய வேண்டும் என்று தொடங்கியதுதான் kashvi நிறுவனம் …கடந்த 2021 நிறுவனத்தை தொடங்கினேன் 

இயற்கையாக நம்மை சுற்றி எளிதில் கிடைக்க கூடிய கற்றாழை,மஞ்சள், ஆரஞ்சு, பீட்ரூட் ,ரோஸ், பாதாம் என நம்மை சுற்றி இருக்கும் பொருட்களை வைத்து ஃபேஸ் பேக் லிப் பாம் தயாரிக்க தொடங்கினேன் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. https://www.instagram.com/kashvi_organics?igsh=N2F3aGk5aHU3dWti

இந்த நிறுவனம் தொடங்குவதற்கு ஸ்கின் கேர் குறித்த பயிற்சியும் பெற்றுக் கொண்டேன்.

இளங்கலை படித்து முடித்த பின்னரே என்னுடைய முதுகலை படிப்பிற்கான செலவுகள் அனைத்தும் நானே செய்ய வேண்டும் என்று தனியே சம்பாதிக்க தொடங்கினேன் அந்த ஊக்கமே தொடர்ந்து என்னை ஒரு தொழில் முனைவராக உருவாக்கும் எண்ணத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது.

இது மட்டுமின்றி புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பியூட்டிஷியன் கோர்ஸ் படித்தேன்.அழகு கலை என்பது எல்லாம் சார்ந்தது தானே எனவே அதையும் கற்றுக் கொண்டேன்.

https://www.instagram.com/aishumakeupandhair?igsh=MTNuemp0MWlpaGdlZg==

எல்லாவற்றையும் தாண்டி கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் வேலைவாய்ப்பு தனித்திறன் மேம்பாடு குறித்து பயிற்சிகளும் அளித்து வருகிறேன்.

நான் கற்றுக் கொண்டதை பிறருக்கு கற்றுக் கொடுப்பதில் இருக்கும்இன்பம் நம்மை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்கிறார் ஐஸ்வர்யா

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *