திருச்சி மக்களின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக உய்யக் கொண்டான் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் சுமார் 50,000 க்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பெட்டவாய்த்தலையில் காவிரியின் கிளை வாய்க்காலாக பிரிந்து திருச்சி மாவட்டத்தின் புறநகர், மாநகர் எல்லைக்குள் பாய்ந்து வாழவந்தான் கோட்டை ஏரி வழியாக சுமார் 71 கி.மீ தூரம் பயணித்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேராண்டி ஏரியில் முடிவடைகிறது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த உய்யகொண்டான் வாய்க்காலில் மாநகர் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் வணிக வளாகங்கள் குடியிருப்புகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறியக்கூடிய கழிவுநீர் நேரடியாக உய்யக்கொண்டான் வாய்க்காலில் கலப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வாய்க்கால் முற்றிலும் மாசடைந்து கழிவுநீர் வாய்க்காலாக உருமாறி உள்ளது.
இதனை விவசாயத்துக்கு பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு நோய் தொற்று ஏற்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு அமைப்புகள் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை முறையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில் விவசாய பாசனத்திற்கு பெரிதும் பயன்படக்கூடிய வகையில் உய்யக் கொண்டான் வாய்க்காலில் அரியமங்கலம் முதல் காட்டூர் மஞ்சதிடல் வரை அமைக்கப்பட்டுள்ள 15 குழுமிகள் முற்றிலும் சேதம் அடைந்து பராமரிப்பின்றி உள்ளதாகவும், உய்யக் கொண்டான் வாய்க்காலில் வீசப்படும் குப்பைகளால் அடிக்கடி குழுமியில் அடைப்பு ஏற்பட்டு பாசன வசதி பெற முடியாத நிலை உள்ளது எனவும், 
அதே போல் உயிரிழந்த ஆடு, மாடு, நாய், பன்றி போன்ற விலங்கினங்களை உயக்குண்டான் வாய்க்காலில் வீசி செல்வதால் குழுமி அருகே வரும்போது குழுயில் சிக்கி அடைப்பு ஏற்படுகிறது எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குழுமிகளை சீரமைத்து தர வேண்டும், விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் உய்ய கொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments