தேறுவாரா நேரு மகன் ! மலைக்கோட்டை மாநகரில் பேச்சு !!

தேறுவாரா நேரு மகன் ! மலைக்கோட்டை மாநகரில் பேச்சு !!
தேறுவாரா நேரு மகன் ! மலைக்கோட்டை மாநகரில் பேச்சு !!

என்ன தலைவரே ரொம்ப நாளா ஆளையே காணும்

உனக்கு என்ன ராஜீ கவலை? ஆசிரியர் சொல்றத அப்படியே வாட்டர் மார்க்கை வச்சு ஒரு படத்தை போட்டு அப்லோடு பண்ணிட்டு ஹாயா காத்து வாங்கிகிட்டு காலை ஆட்டிக்கிட்டு ... உன் சுகம் எல்லாருக்கும் வருமா ?

ம் ம் நல்லா சொன்னீங்க அப்புறம் வீடியோ எடுக்க, வெளியே போய் செய்தி சேகரிக்க இப்படி நாங்களும் பல வேலைகளை பாத்துகிட்டுத்தான் இருக்கோம். தெரியும் இல்ல,

சரி சரி சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். வேலை செய்யுற இடத்துல இப்படி சின்ன சின்ன கேலி, கிண்டல்கள் இருந்தாத்தான் வேலைசெய்ய உற்சாகம் கிடைக்கும். வேலையை ரசிச்சு செய்ய முடியும் அப்புறம் அந்த வசந்த்கிட்ட அமைச்சரோட அடுத்த வாரிசு சம்மந்தமா ஒரு கார்டு போட சொன்னேன் என்னாச்சு ராஜீ ?

அத நீங்களே பாருங்க,

அட அட இது தேறாது போல ராஜீ...

என்ன தலைவரே சொல்றீங்க ?

நான் நினைச்சதுபோல இல்ல தாய் எட்டடி பாஞ்சா குட்டி 16 அடி பாயும்பாங்க இது சரியா இல்லையே!

என்ன நீங்க வசந்தையா சொல்றீங்க தலைவரே?

இரு ராஜீ உனக்கு கொஞ்சம் கூட பொறுமை இல்லையா சொல்ல மாட்டேனா...

திருச்சி மாவட்ட அமைச்சர்னாலே பேரைச் சொல்ல வேண்டியதில்லை அப்படிங்கறது எல்லாருக்கும் தெரியும்.

அதெப்படி தலைவரே, ஏகப்பட்ட அமைச்சருங்க இருந்திருக்காங்க, இப்பவும்கூட ரெண்டுபேர் இருக்காங்களே... 

விதண்டாவாதம் பண்ணாம சொல்றதைக் கேளு ராஜீ...

சரி சொல்லுங்க

தம்பியோட மரணம் அவரை ரொம்பவே பாதிச்சிருச்சு. அந்த சோகத்திலயிருந்து தினமும் அவரால வெளியே வரமுடியலை. சமீபத்துல நடந்த அவரோட பிறந்தநாள் விழாவிலை கூட எப்பொழுதும் போல அமைச்சர் கண்கலங்கிவிட்டு மாலை மரியாதை செலுத்திவிட்டு போயிட்டாரு.

ஆமா அதான் படமெல்லாம் வந்துச்சே குறுக்க பேசாத ராஜீ ஃப்ளோ விட்டு போயிடும் 

சாரி தலைவரே சரி சரி... 

அன்றைய தினம் அந்த நிகழ்ச்சியில் அமைச்சரோட மகன் எவர் கண்ணிலும் பட்டதா தகவல் இல்லை. அதேபோல நேற்று திருச்சி மாவட்ட பீஸ்ட் பவுன்சர்ஸ் சார்பில் 4ம் ஆண்டு உடல் உறுப்பு தானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை அமைச்சர் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். பின்னர் உறுப்பு தானம் குறித்து பேசினார் இந்த விழாவில் கலந்து கொள்வதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தாலும் அமைச்சரோட மகன் ஆப்செண்ட்டாம். 

என்ன சொல்றீங்க தலைவரே

ஆமாம் ராஜீ அப்பா அளவிற்கோ, சித்தப்பா அளவிற்கோ திறமைகளை வளர்த்துக்காம இருக்காருன்னு கட்சிக்காரங்களே வருத்தப்படறாங்க. ஒருவரை ஒரு முறை பார்த்தா அடுத்த முறை பெயரைச்சொல்லி அழைப்பார் அமைச்சர். அதேபோலத் தான் அவரோட தம்பியும். ஆனா இவரு என்னத்த சொல்லனு கட்சிக்காரங்களே காதுபட பொலம்புறாங்க

இவ்வளவு எதுக்கு, ஒரு டிஎஸ்பி, அமைச்சரை பார்க்க திருச்சி வீட்டுக்கு போயிருக்காரு, இங்க ஒரே கும்பலா இருக்கு நீங்க சென்னை வந்துடுங்க அங்க பேசிக்கலாம்னு சொல்ல டிஎஸ்பியும் விடியற்காலைல நாலு மணிக்கு கிளம்பி சென்னையை சென்றடைச்சாரு வீட்டுக்கு வெளியே நின்ன அமைச்சரின் பையன் நீங்க யாருனு கேள்வி கேட்க அந்த நேரத்தில் அமைச்சர் வெளியே வர, எதிர்நீச்சல் மாரிமுத்து போல ஏக வசனமாம் ஏய்ய்ய்ய் இவரைக்கூட தெரியலையானு அப்புறம் உள்ளே கூட்டிக்கிட்டு போய் பேசிசிட்டு அன்பா வழி அனுப்பி வச்சாராம் அமைச்சர் இப்படி நிறைய விஷயங்களை மறந்துடுறாராம் அமைச்சரின் அன்பு மகன்.

சரி சரி வர்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூரில் களமிறங்க வைக்க ஏற்பாடு நடந்துகிட்டு இருக்காமே.

ஆமாம் ராஜீ நானும் கேள்விப்பட்டேன். அதுல சில குழப்பங்கள் இருக்காம் என் காதுக்கு கிடைச்ச தகவலை சொல்லிடுறேன்.

சொல்லுங்க தலைவரே நீங்க சொன்னா அது என்னைக்கு தப்பா போயிருக்கு.

அது நம்ம கஷ்டப்பட்டு சேர்த்த சோர்ஸ் ராஜீ இருபத்தி ஐந்தாண்டு கால உழைப்பு. 

பையனை நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூரில் களம் இறக்க அமைச்சர் முடிவு செய்தாராம். ஆனா இளைய தளபதி சனாதனம் பத்தி பேசியதால் எல்லோரும் உங்க கட்சியில மொதல்ல சனாதனத்தை நிறுத்துங்கடா என சத்தம் போட, கூட்டணி கட்சியில் இருக்குற வேந்தர் கூடுவிட்டு கூடுதாவுறதால அந்த இடத்தை ஆனா ராசாவை நிறுத்த தலைமை முடிவெடுத்து இருக்காம் ஓஹோ ராசாவை நிறுத்திட்டா சனாதனம் காணமல் போயிடுமா தலைவரே!

டி ஆர் பாலு, துரைமுருகன், பொன்முடி, ஆற்காடு வீராச்சாமி போன்றோர் தங்களது வாரிசுகளுக்குப் பட்டம் கட்டி அரசியலில் நிலைநாட்டிவிட்ட நிலையில் தனது வாரிசும் சோடை போகக்கூடாது என அமைச்சர் மெனக்கெட்டாலும் அதைப் புரிந்துகொள்ளாமல் வாரிசு தன்னிச்சையாக நடந்துகொள்வது அமைச்சருக்குப் பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

ராஜீ சனாதனம் போறதைவிட மகனுக்கு சீட்டு போயிடுமோனு கவலையில் இருக்காராம் அமைச்சர். என்னடா இது எந்த பக்கம் போனாலும் இப்படி ஒரு கேட் விழுதேன்னு உடையார்பாளையம் அருகே உள்ள வள்ளுவர் ஒருவரை பார்த்துட்டு வந்துட்டதாகவும், இந்த தேர்தல்ல வேண்டாம் சட்டமன்ற தேர்தலில் பார்த்துக்கலாம்னு முடிவெடுத்துட்டதாவும் சொல்றாங்க,

அதெல்லாம் சரி தலைவரே சின்னவருக்கு சின்ன வயசுல அத்தோ மொய்ஞா எக்ஃபிரை பேஜோ வாங்கிக்கொடுத்த அவரை நியாபகம் வச்சுகிட்டு இருப்பாரா சின்னவரு 

ராஜீ ஆனாலும் உனக்கு ஏக எகத்தாளம்தான் நான் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வர்றதுக்குள்ள இந்த மேட்டரும் கார்டை ரெடி பண்ணு... 

சரி சரி தலைவரே அடுத்ததொரு நல்ல தகவலோட வாங்க

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision