நியோ மேக்ஸ் மற்றும் அதன் 63 துணை நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன. நியோ மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீட்டு பணம் இரட்டிப்பாகும், மாதந்தோறும் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாக அளித்த வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கானோர் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்படி நியோ மேக்ஸ் இயக்குனர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் நியோ மேக்ஸின் 17 கிளை நிறுவனங்களை ‘சீல்’வைத்த அதிகாரிகள், விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற (08.09.2023)-ந் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments