திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக ராமச்சந்திரன் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக பொறுப்பு வகித்து வந்தார். தற்போது காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் பணியிட மாற்றம் அறிவிப்பு வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவுக்கு புதிய உதவி ஆணையராக செந்தில்குமார் மாற்றலாகி வருகிறார்.


செந்தில்குமார் ஏற்கனவே திருச்சியில் கோட்டை காவல் நிலையம், உறையூர் ,முசிறி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வாளர் ,காவல்துறை கண்காணிப்பாளர் ஆகவும் பணிபுரிந்துள்ளார். தற்பொழுது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவிற்க்கு பணியாற்றி வருகிறார். நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் என்பது மாநகர காவல் துறையில் ஒரு முக்கிய பொறுப்பான பணி 22 காவல் நிலையங்களில் திருச்சி மாநகரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve







Comments