திருச்சி திருவானைக்காவல் நெல்சன் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரி(20). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் அருகே விக்கி என்கிற விக்னேஷ் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர். இந்நிலையில் தீபாவளி வெடி வெடிப்பது தொடர்பாக இவருக்கும் பெரியசாமி டவரில் உள்ள செல்போன் கடையில் பணியாற்றும் சித்திக் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது.
Advertisement
இந்நிலையில் இன்று பெரியசாமி டவருக்கு வந்த மாரி கூடிய விரைவில் உன்னை போட்டுடூவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் கடைக்கு சென்ற சித்திக் உடனடியாக இரண்டு நாட்கள் விடுமுறை என்று கூறி விட்டு, வௌியில் சென்று தனது திருவானைக்காவல் நண்பர்களை அழைத்து உள்ளார்.
ஆட்டோவில் அங்கு வந்த நண்பர்களிடம் மாரி மிரட்டுவது தொடர்பாக கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேர் கொண்ட நண்பர்கள் கூட்டம் கைகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மீண்டும் பெரியசாமி டவர் பகுதிக்கு வந்துள்ளது. அங்கு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த மாரியை சுற்றி வளைத்துள்ளனர். இதனால் மாரியின் நண்பர்கள் ஓட்டம் பிடித்து உள்ளனர். மாரியை சுற்றி வளைத்து கொலை செய்ய முயன்றபோது அவர் தப்பித்து ஓடி உள்ளார்.
Advertisement
சிறார்கள் சுற்றி சுற்றி அவரை ஆயுதங்களால் தாக்கியதில் அவருக்கு 3 இடத்தில் கத்தி குத்து மற்றும் வெட்டு காயம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் அவர் தப்பி விட்டார். இதன் காரணமாக சித்திக் உள்ளிட்ட 5 பேர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் விசாரணைக்காக கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மாரி தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments