அம்ரித் பாரத் விரைவு இரயில் திட்டத்தின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, புது ஜல்பைகுரி – திருச்சி இரயில் சேவைக்கு மனமார்ந்த நன்றி!
வடகிழக்கு இந்தியாவின் புது ஜல்பைகுரியிலிருந்து தென்னிந்தியாவின் திருச்சி வரை இணைக்கும் இந்த வாராந்திர இரயில் சேவை பயணிகளுக்கு விரைவான பயண வசதியை வழங்குகிறது.
இந்த இரயில், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம் ஜங்ஷன், செங்கல்பட்டு ஜங்ஷன், தாம்பரம், சென்னை எழும்பூர் மார்க்கமாக செல்கிறது.
இந்த புதிய இரயில் சேவை வடகிழக்கு மற்றும் தென்னிந்தியாவை இணைக்கும். இதனால் வெளி மாநிலங்கள் செல்லும் பயணிகளுக்கும், சென்னை செல்லும் பயணிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
இந்த புதிய இரயில் சேவையை வழங்கிய இரயில்வே துறை அமைச்சருக்கும், தென்னக இரயில்வே நிர்வாகத்திற்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments