திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சினேகாவும் (25), புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த விஜயகுமாரும் (30) காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் விஜயகுமாரும், பட்டதாரியான சினேகாவவும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் விஜயகுமார் மற்றும் சினேகா தம்பதியினர் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விஜயகுமார் மற்றும் சினேகா இருவருக்கும் அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது. இதனால் விஜயகுமார் இவரது தாயார் வீட்டிற்கு புள்ளம்பாடி சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று சினேகா கணவர் விஜயகுமாருக்கு வீடியோ கால் மூலம் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். பின்னர் சினேகா இன்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுப்பற்றி தகவலறிந்த கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சினேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஶ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா விசாரணை நடத்தி வருகின்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments