Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

நடிகர் என்கிற போர்வையில் பின்னால் யாரும் செல்ல மாட்டார்கள் – எங்களுக்கு சீட் முக்கியமில்லை – திருமாவளவன்

நடிகர் என்கிற போர்வையில் பின்னால் யாரும் செல்ல மாட்டார்கள் .எங்களுக்கு சீட் முக்கியமில்லை – திருச்சியில் திருமாவளவன் பேச்சுபாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த 11 ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் தடை சட்டம், வக்பு திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். இந்த சட்டங்கள் நேரடியாக இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்கள் என்றாலும் கூட இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் அதன் உயிர் நாதமான

 மதச்சார்பின்மைக்கும் எதிரானது என கூறி அந்த அரசியலமைப்புச் சட்டத்தையும் மதச்சார்பின்மையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்கிற அடிப்படையில் மதச்சார்பின்மையை பாதுகாப்போம் என்கிற மையக்கருத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் பேரணி தொடங்கி நடந்தது.டிவிஎஸ் டோல்கேட் அருகே தொடங்கிய பேரணி கல்லுக்குழி, தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை வழியாக சென்று திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.பேரணிக்கு முன்பாக திருமாவளவன் தலைமையில் மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.பேரணி நிறைவில் திருமாவளவன் உரையாற்ற உள்ளார். இந்த பேரணியில் வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதை கைவிட வேண்டும், மதவாத வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கும்பல் படுகொலையை பயங்கரவாத குற்றமாக அறிவிக்க வேண்டும் ஜம்மு காஷ்மீர் மீண்டும் மாநிலமாக அறிவிக்க வேண்டும், மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு உரிமையை வழங்க வேண்டும் பொது சிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர்.திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் நீல நிற ஆடை அணிந்து பேரணியில் பங்கேற்றனர்.பேரணியில் நிறைவில் நடந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார் அதில்,இந்திய அரசியலில் பேரதிர்வுகளை உருவாக்கும் பேரணி.மற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்தும், எத்தனை தொகுதிகள் குறித்தும் பேசி கொண்டிருக்கிறார்கள் அது குறித்து நாம் கவலைப்படுவதில்லை.திமுகவிடம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது என சில அறிவிலிகள் பேசுகிறார்கள். தமிழ்நாடு அரசியலின் திசை வழியை தீர்மானிப்பவர்கள் விடுதலை சிறுத்தைகள்.இந்திய அளவில் மதச்சார்பின்மைக்கு எதிரானவர்கள் மதச்சார்பின்மைக்கு ஆதரவானவர்கள் என்கிற கூர்மைப்படுத்தும் அரசியலை வி.சி.க தான் செய்து வருகிறது.முதலமைச்சர் பதவி குறித்து கவலைப்படுபவர்கள் அல்ல நாங்கள்.பூர்வ குடிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான் அம்பேத்கரின் கனவு.

எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.தேர்தல் அரசியல் வேண்டாம் என 10 ஆண்டுகள் நாங்கள் இருந்தோம்.அரசியல் களத்தில் சம காலத்தில் எங்களோடு புறப்பட்டு விட்டவர்கள் வழி தவறி காணாமல் போய் விடார்கள் ஆனால் வி.சி.க தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக உள்ளது.எங்களுக்கு யாருடைய ஆலோசனைகளும் தேவையில்லை. எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு தெரியும்.நாம் பட்டியல் சமூக மக்களை ஏமாற்றுகிறோம் என சிலர் கூறுகிறார்கள். அனைத்து தளத்திலும் பட்டியல் சமூக மக்கள் தலை நிமர்ந்து நிற்க வி.சி.க தான் காரணம். நீங்கள் எல்லாம் பேசும் துணிச்சலால் தான் நாங்கள் பாடுகிறோம் என வேடன் கூறினார்.கட்டிட வேலை செய்பவர்கள், ஆடு மாடு மேய்ப்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கழ் என அனைவரும் கோட் அணிய வேண்டும் என்பதால் தான் நான் பேரணிக்கு வரும் அனைவரையும் கோட் சூட்டுடன் வர கூறினேன். அம்பேத்கர் போல் நடக்க வேண்டும், அம்பேத்கர் போல் உணர வேண்டும்.ஜாதி வெறியை பேசுபவர்கள் அல்ல வி.சி.க. நாங்கள் ஆண்ட பரம்பரை அல்ல அறிவுப்பரம்பரையை சேர்ந்தவர்கள்.

நாங்கள் அம்பேத்கர், பெரியாரின் பிள்ளைகள், மார்க்ஸின் கருத்தியலை உள்வாங்கியவர்கள் அதனால் ஒரு முடிவை எடுத்து தெளிவாக இருக்கிறோம். அதனால் தான் திமுக கூட்டணியில் இருக்கிறோம்.

திமுக உடன் நாம் கொண்டுள்ள உறவு கொள்கை உறவு.

திமுக அரசுடன் எங்களுக்கு இருக்கும் விமர்சனங்களை தாண்டி கூட்டணி வைத்திருப்பது தொலைநோக்கு பார்வையுடன் கூடியது.

பா.ஜ.கவினருக்கு திடீரென முருகன் மீது பக்தி வந்து விட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கடவுள் மேல் பக்தி கொண்டுள்ளார்கள்.

அடிப்படை உரிமைகளுக்காக, பள்ளிக்கூடம், கல்லூரி கேட்டு, இட ஒதுக்கீடு கேட்டு போராடதவர்கள் பா.ஜ.க வினர். அவர்களுக்கு திடீரென முருகன் மீது பக்தி வந்து விட்டது.

தலித்களின் உரிமைகளுக்காக போராடதவர்கள் பா.ஜ. கவினர்.பா.ஜ.க திட்டத்தை செயல்படுத்த பலர் பல வேஷம் போட்டு வந்துள்ளார்கள். சிலர் சினிமா புகழோடு நடிகர் போர்வையில் வேஷம் போட்டு வந்துள்ளார்கள். தலித்கள் அவர் பின் சென்று விடுவார்கள் என சிலர் கூறுகிறார்கள்.அம்பேத்கரை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் வி.சி.கவினர். வி.சி.கவினர் எப்பக்கமோ அப்பக்கமே வெற்றி, அப்பக்கமே ஆட்சி.தேர்தலை பற்றி கவலைப்படாமல் தேசத்தை பற்றி கவலைப்படுபவர்கள் நாம் என்பதற்கு சாட்சி தான் இந்த பேரணி.

அம்பேத்கர் உருவாக்க நினைத்த இந்தியாவில் ஜாதி இருக்காது, ஆண் பெண் பேதம் இருக்காது, எல்லோரும் சகோதரர்களாக வாழ்வோம். அப்படி ஒரு இந்தியாவை நாம் கட்டமைக்க அரசியமைப்புச்சட்டத்தின் உயிர் மூச்சான மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும்.முஸ்லீம்களையும், கிறிஸ்துவர்களையும் அந்நியர்களாக ஒரே அரசே காட்டுகிறார்கள்.அரசுக்கு மதம் இருக்க கூடாது. அனைத்து மதங்களிலும் சகோதரத்துவம் உள்ளது. ஆனால் இந்து மதத்தில் தான் பாகுபாடு பார்க்கப்படுகிறது.வேறு மொழிக்காரர், வேறு மாநிலத்துக்காரர் என கூறி நாம் தலைவராக ஏற்றுக்கொண்ட அம்பேத்கர், பெரியாரை புறந்தள்ளி விட முடியாது. அவர்கள் பேசிய கொள்கையும், தத்துவமும் தான் முக்கியம்.திராவிட இயக்க அரசியல் வெறுப்பை பரப்புபவர்கள் அதன் மூலம் சனாதான சக்திகளுக்கு துணை போகிறார்கள்.சங்பரிவார்கள் அம்பேத்கரை கொண்டாடுவார்கள் ஆனால் அவர் இயற்றிய சட்டத்தை காலில் தூக்கி போட்டு மிதிப்பார்கள்.நம்மை எந்த சக்திகளாலும் வீழ்த்த முடியாது.

தற்காலிக அரசியல் பயனுக்காக எந்த தவறான முடிவையும் எடுக்க மாட்டோம். நமக்கு இந்த நாடு முக்கியம் என்றார்.இந்த கூட்டத்தில் விசிக மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார், சிந்தனை செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ் பனையூர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *