Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் வடகிழக்கு பருவமழை 20 சதவீதம் குறைந்துள்ளது – ஆட்சியர் சிவராசு பேட்டி!!

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம்(EVMS) காகித சோதனை கருவி (VV PATS) பாதுகாப்புடன் வைப்பதற்கான, பாதுகாப்பு கிடங்கு கட்டிட பணி நடைபெற்று வருகிறது.

4 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிட பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது…. இந்தப் பணியானது ஜனவரி 31-க்குள் முடிப்பதற்கு உத்தேசித்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்காக மத்திய பிரதேசத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வர உள்ளது.

Advertisement

முதல்நிலை சோதனைக்கு பின்பு ஒன்பது தொகுதிக்கான அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் இந்த கட்டிடத்தில் வைக்கப்படும். அதன் பின்னர் 2535 வாக்குப்பதிவு மையங்களுக்கான, வாக்கு பதிவு இயந்திரங்களும், 4200 கண்ட்ரோல் யூனிட் யூனிட்களும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்பு பூஜ்ஜியம் நிலைக்கு கொண்டு வரப்படும். இந்த கட்டிடத்தின் கதவுகள் மிகவும் உயரிய பாதுகாப்புடன் அமைக்கப்பட்ட உள்ளது. கட்டிடத்தின் உள்ளே மின் விளக்குகள், ஃபேன்கள் கிடையாது. மேலும் இந்த கட்டிடத்தில் வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்படும் தளத்தில் ஜன்னல்களே இருக்காது. வெளிப்புறம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருக்கும் என்றார்.

 மேலும் பேசிய அவர் திருச்சியில் சராசரி மழை பொழிவில், 30 சதவீத மழை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் பெய்துள்ளது. திருச்சி மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் போதிய அளவு மழை இல்லை. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 20 சதவீதம் குறைந்து உள்ளது. மழையினால் திருச்சி சாலைகள் சாலைகள் சேதமடைந்து உள்ளது. மாநகராட்சி சாலைகள் சீரமைக்க 38 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து சாலைகள் சீரமைக்கும் பணி, அதற்கான நிதி பெறப்பட்டு மழை காலம் முடிந்த பின்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என்று அவர் கூறினார்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *