Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்திய அரசால் ஹஜ் செல்லும் நபர்களில் ஒருவர் கூட குறையவில்லை – இந்திய ஹஜ் அமைப்பு தலைவர்

No image available

இந்திய அரசால் ஹஜ் செல்லும் நபர்களில், ஒருவர் கூட குறையவில்லை – எந்த ஏஜென்ட்களுக்கும் சவுதி அரேபியாவில் தடை இல்லை – இந்திய ஹஜ் அமைப்பு தலைவர் அபூபக்கர் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி

இந்திய ஹஜ் அமைப்பு தலைவர் அபூபக்கர் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில்..,ஹச் 2025, புனித ஹஜ் அக்பராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. வெள்ளிக்கிழமை வருவதற்கு பெயர்தான் ஹஜ் அக்பர். தனியார் துறை ஆபரேட்டர்களுக்கு உள்ள பிரச்சனையை முடித்து வைக்க இந்தியாவிலேயே முதலாவதாக தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

40 கோடி இஸ்லாமியர்கள் சார்பாக தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை வைத்துள்ளார். அவருக்கு நன்றி. இந்தமுறை ஹஜ் 2025 சிறப்பாக இருக்கும். சவுதி அரேபியா கடந்த எட்டு மாத காலமாக எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது என்பதற்காக, ஒரு பொதுவான முறையில் தண்ணீர், சாலை உள்ளிட்டவைகள் குறித்து செலவுகளை செய்து ஏற்பாடு செய்து வருகின்றனர். நமது தூதரகம் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஹாஜிகளுக்கு சென்று வர ஏற்பாடு சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றனர். 42 ஆயிரம் தனியார் ஹாஜிக்கள் விண்ணப்பித்திருக்கும் நிலையில்,10 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்ல யார் யாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விகிதாச்சார அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தனியார் மூலம் பணம் கட்டிய அனைத்து பணமும் தூதரகத்திற்கு சென்றுள்ளது.பகல்காம் தாக்குதலின் போது பாரத பிரதமர் சவுதி அரேபியாவில் இருந்தார். அவருக்கு ஹஜ் குறித்து கோரிக்கை வைப்பதாக இருந்தது. அந்தப் பிரச்சினை ஏற்பட்டதால் கோரிக்கை வைக்கவில்லை.

தாக்குதல் சம்பவத்தில் இஸ்லாமிய சமூகத்தினரும் இந்துக்களோடு ஒற்றுமையாக இருந்து ஒற்றுமையை காட்டியுள்ளனர். அதனை உலகம் முழுவதும் பாராட்டுகின்றனர்.  இந்திய அரசால் ஹஜ் பயணம் செய்யக் கூடியவர்கள் ஒருவர் கூட குறையவில்லை. ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 463 பேர் சிறப்பாக செல்வார்கள். தனியார் மூலம் கொடுக்கப்படும் 42,000 பேர் தான் குறைந்துள்ளது. அதற்கு சில டெக்னிக்கல் கோளாறு, காலதாமதம் காரணமாக அவர்கள் செல்லவில்லை. பத்தாயிரம் பேருக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். எந்த ஏஜெண்டுகளுக்கும் சவுதி அரேபியா தடை விதிக்கவில்லை. 

ஹாஜி நன்மைக்காக அடையாள அட்டை இல்லாமல் அங்கு பணிபுரிபவராக இருந்தாலும் உள்ளே செல்லக்கூடாது. என மட்டுமே அறிவித்திருக்கின்றனர். தமிழக முதல்வர் ஹஜ் பயணத்திற்கு 80 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஹஜ் பயணம் செல்லும் நபர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கிற்கு சென்று விடும் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *