தமிழ்நாடு அரசு பணியாளர் தோ்வாணையம் வாயிலாக Group-IV-ல் பல்வேறு பணியிடங்களுக்குரிய தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பில்
முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு சலுகையும், முன்னாள் படை வீரா்களுக்கென இடஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.tnpsc.gov.in விண்ணப்பிக்க கடைசி நாள்: 28-04-2022. மேற்காணும் பணிகளுக்கு தகுதியுடைய முன்னாள் படைவீரா்கள் இவ்வறிய வாய்ப்பினை பயன்படுத்தி, அதிக அளவில் விண்ணப்பித்து பயனடையுமாறு
தெரிவிக்கப்படுகிறது. மேலும் முன்னாள் படை வீரா்கள் பயன்பெறும் வகையில் இத்தோ்விற்கான பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்து வழங்கப்படவுள்ளது.
எனவே, விண்ணப்பித்துள்ள முன்னாள் படைவீரா்கள் அதன் விவரத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் தெரிவித்திடுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவா் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO






Comments