நவம்பர் 1ம் தேதி முதல் வெளி மாநிலத்தவர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் - திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் நடைபெற்ற போராட்டத்தில் அறிவிப்பு!!

நவம்பர் 1ம் தேதி முதல் வெளி மாநிலத்தவர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் - திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் நடைபெற்ற போராட்டத்தில் அறிவிப்பு!!

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 7வது நாளாக இன்று காலை திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில், தடையை மீறி மறியல் போராட்டம் நடைபெற்றது.இதில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 11.09.2020முதல் நடைபெற்ற 7 நாட்கள்
தொடர் மறியல் போராட்டத்தின் நிறைவில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் பேட்டியளித்த போது...

Advertisement

தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே என்கிற முழக்கத்தை முன்வைத்து வரும் நவம்பர் 1ம் தேதி முதல் வெளி மாநிலத்தவர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்.இதன்படி, இந்திக் காரர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்களுக்கு வீடு வாடகைக்கு தரக் கூடாது. தனியார் நிறுவனங்கள், கடைகளில் வேலை தரக் கூடாது. வட இந்தியர்களின் நிறுவன பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சிகள், அமைப்புகள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.1956 மொழிவாரி மாநிலங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, காந்திய வழியில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Advertisement

இதன்படி, இந்திக்காரர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்களுக்கு வீடு வாடகைக்கு தரக் கூடாது. தனியார் நிறுவனங்கள், கடைகளில் வேலை தரக் கூடாது. வட இந்தியர்களின் நிறுவன பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சிகள், அமைப்புகள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

1956 மொழிவாரி மாநிலங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, காந்திய வழியில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.