திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வேலாயுதபுரம் பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த கொள்முதல் நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்து அறுவடை செய்த நெல்லை கொள்முதலுக்காக கொண்டு வந்து குவித்துள்ளனர்.
அப்படி குவிக்கப்படும் நெல்லை பாதுகாப்புடன் கொள்முதல் செய்யும் அளவிற்கு எவ்வித அடிப்படை வசதி இல்லாமல் அரசின் நெல் கொள்முதல் நிலையம் திறந்தவெளியில் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பேசும்போது,
நெல் கொள்முதல் செய்வதற்கு போதிய முன் ஏற்பாடு வசதிகள் இல்லாததால் திறந்த வெளியில் குவிக்கப்பட்டிருக்கும் நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகிறது.
அதனை அளவை செய்து கொள்முதல் செய்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால் எங்களது நெல்மணிகள் முளைத்து விடுகிறது. இதனை அதிகாரிகள் கொள்முதல் செய்வதுமில்லை.
இது குறித்து தர கட்டுப்பாடு மேலாளர் அவர்களிடம் போதிய வசதி செய்தபின் நெல்லை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினோம்.
அப்படியெல்லாம் செய்ய இயலாது நீங்கள் கொண்டுவந்து குவிக்கும் நெல்லை ஊழியர்கள் அளவை செய்து கொள்முதல் செய்யும் வரை
நீங்களே தார்ப்பாய் வைத்து மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கரராக பேசுகின்றனர்.
அப்படியே அரும்பாடு பட்டு நெல்மணிகளை நாங்கள் கண் போல பாதுகாத்து கொள்முதலுக்கு தயாராக வைத்திருந்தாலும்
கொள்முதல் செய்ய தாமதப்படுத்துவதுடன்.. ஒரு 40 கீலோ மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷனாக கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் நெல் மூட்டைகள் எடுக்காமல் அதிகாரிகள் விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர்
ஆனால் தனக்கு வேண்டப்பட்டவர்களின் நெல்லை மட்டும் கொண்டு வந்த முதல் நாளே அளவை செய்து கொள்முதல் செய்து பாரபட்சம் காட்டுகின்றனர் என அப்பகுதியில் விவசாயிகள் குற்றம் சாற்றுகின்றனர்.
இதே போல லால்குடி நகர் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 15 நாட்களாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்துள்ளது ,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments