துறையூர் நகராட்சி இருபதாவது வார்டு மக்களுக்கு 80 ஆண்டு காலமாக குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்காமல் அலைகழிக்கும் அதிகாரிகள் வருகின்ற ஒன்பதாம் தேதி கருப்பு கொடியேற்றி போராட்டம் செய்வதாக பொதுமக்கள் அறிவிப்பு.
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்டது 20 வது வார்டு காமராஜர் நகர்.இங்கு சுமார் 80 ஆண்டு காலமாக மூன்று தலைமுறையாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலைகழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வருகின்ற ஒன்பதாம் தேதி பட்டா வழங்குவதாக ஒரு மாதத்திற்கு முன்பே வீடுகளுக்கு வந்து கிராம நிர்வாக அலுவலர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மற்றும் மின் இணைப்பு அடையாள அட்டை போன்ற ஆதாரங்களை வாங்கி சென்றார். அதைத் தொடர்ந்து ஒன்பதாம் தேதி பட்டா வழங்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் திடீரென பட்டா உங்களுக்கு வழங்க முடியாது என வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் வட்டாட்சியரிடம்டம் சென்று கேட்டபோது பட்டா வழங்குவதை நிறுத்துமாறு பெட்டிஷன் வந்ததாக தெரிவித்தார். ஆனால் இதுவரை அதற்கு எந்தவிதமான ஆதாரத்தையும் மக்களிடம் வழங்கவில்லை என தெரிகிறது சுமார் 68 குடும்பங்கள் 80 ஆண்டு காலமாக வசித்து வரும் நிலையில் வட்டாட்சியர் இவ்வாறு கூறியதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வருவாய் அதிகாரிகளை கண்டித்து வருகின்ற 9.5.25 அன்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவதாக கூறியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments