தமிழ்நாடு முதலமைச்சர் வழிக்காட்டுதலின்படி சுற்றுலாத்துறை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மீக பயணிகள் பயன்பெறும் வகையில்
சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றலா (17.07.2022) அன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
திருச்சிராப்பள்ளியில் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில், திருச்சி அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில், திருச்சி அருள்மிகு அகிலாண்டேஸ்வரி திருக்கோவில், திருவானைக்காவல், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம், அருள்மிகு உஜ்ஜயினி மாகாளி அம்மன் திருக்கோவில், சமயபுரம் அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோவில், சிறுவாச்சூர்-அருள்மிகு பொன்னேஸ்வரி அம்மன் திருக்கோவில், பொன்மலை ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.900/- எனவே சுற்றுலா பயணிகள் ஆண்மீக அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
இந்த சுற்றுலாவிற்கு www.ttdconline.com என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 9176995862, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments