சுற்றுலாத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறை
சுற்றுலாத்துறையில் தொழில் வாய்ப்புகள் குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை பிஷப் ஹீபர் கல்லூரியில் வரலாற்றுத் துறையினரால் நடத்தப்பட்டது.இதில் மொத்தம் 220 மாணவர்கள் கலந்து கொண்டனர் .
அருண் பிரசாத் ,கூடுதல் சுற்றுலாத் துறை அதிகாரி
சுற்றுலாத்துறையில் வழிகாட்டினர் பெற வேண்டிய தகுதிகள் என்ன?
வழிகாட்டி பணி வாய்ப்புகள் யாவை? அதற்காக மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும். வழிகாட்டியாய் அறிந்து கொள்ள வேண்டிய முறைகள் யாவை? போன்றவற்றை நன்கு புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்தார்.
வெளிநாட்டு மொழிகளான பிரெஞ்சு ,இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க அறிவுறுத்தினார். மாணவர்கள் சுற்றுலாத் துறையில் வேலை வாய்ப்பினை பெற அனைத்து துறையிலும் சிறந்த அறிவும் ஆற்றலும் பெற வேண்டும் என்று கூறினார் .வெளிநாட்டினரை சுற்றுலா துறையின் மூலம் எவ்வாறு கவர்ந்து நாட்டின் அந்நிய செலவாணியை நாம் உயர்த்திக் கொள்ள முடியும் , போன்றவற்றை அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
இ -டிக்கெட் மற்றும் விசா செயல்முறை பற்றிய தகவல்களை இயக்குனர் ஆண்ட்ரூஸ் அமலன் எடுத்துரைத்தார்.
இந்த பயிற்சி, மாணவர்கள் எதிர்காலத்தில் சுற்றுல்லா துறையிலும் அதை சார்ந்த தொழில் துறையிலும் தங்களுடைய ஆர்வத்தினை ஈடுபடுத்தி வளர்வதற்கு உதவும் . மாணவர்கள் தங்கள் சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்டு அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டினர்.
இந்த பயிற்சி பட்டறை, மாவட்ட சுற்றுலா அதிகாரி ஜெகதீஸ்வரி தலைமையில், பிஷப் ஹீபர் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் .முனைவர் ஃபெமிளா அலெக்ஸாண்டர் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டது .
வரலாற்றுத் துறை இளங்கலை வகுப்பு
மூன்றாமாண்டு மாணவி
சினேகா வரவேற்புரையும், பத்ம ஜோதிகா நன்றி உரையும் வழங்கினார்.
இந்த பயிற்சி பட்டறையில், திட்டக்குழு உறுப்பினர்கள் கௌரவ பேராசிரியர்கள் முனைவர். எலிசபெத், அருளானந்தம் , உதவி பேராசிரியர்கள் முனைவர். சாம்ராஜ், முனைவர்.அங்களேஸ்வரி, முனைவர் .ராஜ்குமார் , மனுநீதி மற்றும் செல்வி நிறைமதி ,அலுவலக ஊழியர் ஜஸ்டின் ஜோன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM