எடமலைப்பட்டி புதூர், மேல பஞ்சபூரை சேர்ந்தவர் ராஜுவின் (வயது 65) மகன்கள் கார்த்தி (வயது 28), ஜெயபால் (வயது 36) ஆகிய இருவரும் 29.08.2025 வெள்ளிக்கிழமை இரவு 21:00 மணியளவில் மேலப்பஞ்சபூரில் தன்னுடைய வீட்டில் இருந்து ஆடு, மாடு கட்டி உள்ள இடத்திற்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு செல்லும்போது, மது போதையில் இருந்த, சூர்யா (த/பெ) பிரகாஷ் என்பவர் இந்த வழியாக தண்ணீர் எடுத்துப் போக கூடாது என தகறாரறு செய்ததாகவும், அதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு தங்கவேலு மகன்களான சக்திவேலு, ராமமூர்த்தி மற்றும் 11 நபர்கள்
ராஜூ மற்றும் மகன்களை அருவாளால் வெட்டி, பொருட்களை சேதப்படுத்தியதாகவும் கூறி மூவரும் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்த ராஜு 65 இன்று காலை 7:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதை எடுத்து 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தற்பொழுது ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதம் உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சையில் இருக்கின்றனர்.
குற்றவாளிகள்
1. மாதவன்
2. முருகானந்தம்,
3. அபிஷேக்,
4. சூர்யா,
5. தாமஸ்,
6. அஞ்சலை,
7. சக்திவேல்,
8. குட்ட ஆறுமுகம்,
9. விஜி,
10. வெள்ளையம்மாள்,
11. தேவிகா,
12. ராமமூர்த்தி
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments