Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழ்நாட்டில் உள்ள ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நரிக்குறவர்களும் பாஜகவுக்கு ஆதரவு

தமிழ்நாடு நரிக்குறவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்புக்கு மாநில பொறுப்பாளர்களை தேர்வு செய்வது, மாவட்ட வாரியாக சங்கங்களை ஏற்படுத்தி பொறுப்பாளர்களை நியமிப்பது மற்றும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு நரிக்குறவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்…நரிக்குறவர்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் இணைத்தும் இதுவரை அதற்கான சான்றிதழை பெற இயலவில்லை. நரிக்குறவர்கள் தொழில் முன்னேற்றம் அடைய தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, சுற்றுலா தளம், பேருந்து நிலையம் மற்றும் அன்னதானத் திட்டத்தின் கீழ் இயங்கும் பிரசித்தி பெற்ற கோவில்கள் என தலா ஐந்து கடைகள் என தமிழக முழுவதும் 8000 கடைகளை கேட்டோம் 

ஆனால் 400 கடைகள் தருவதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது வரை ஒரு கடை கூட கொடுக்கப்படவில்லை. கடந்த 75 வருடங்களாக எங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் நரிக்குறவர்கள் இணைந்து பாரதிய ஜனதா கட்சிக்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஆதரவளிப்பது என முடிவு செய்துள்ளோம் எனக்  கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *