சுற்றுலா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சுற்றுலா என்பது வெறும் பயணம் மட்டுமின்றி ஒரு இடத்தின் கலாச்சாரம் வாழ்வியல் முறை எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்கான ஓர் அனுபவம். சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலாவில் நாட்டின் பொருளாதாரமும் உண்டு என்பதை விவரிக்கும் நோக்கிலும் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.
உலகில் உள்ள பல்வேறு நாடுகள் சுற்றுலாவை தங்களது கலாச்சாரத்திற்குள் வைத்துள்ளன. சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், 
செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டு ஐ.நா.சபை அங்கீகரித்து அறிவித்தது. அவ்வகையில் உலக சுற்றுலா தினம் உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் 1980ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.  அதன் பின்னர் தான் சுற்றுலாவுக்கான தினம் என்று ஒன்று தனியாக கொண்டாடப்படுகிறது. இப்போது சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்வி சுற்றுலா என பல வகைகளாகப் பிரிந்து வளர்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய துறையாக விளைவது நம் சுற்றுலாதுறை தான். உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா. போக்குவரத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என 5 துறைகளை சார்ந்து விளங்குகிறது சுற்றுலா துறை. வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலம் சுற்றுலா தான். செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படவுள்ள உலக சுற்றுலா தினத்தையொட்டி,  மெஸ்மரைசிங் திருச்சி என்ற கருப்பொருளில் திருச்சி சுற்றுலா கூட்டமைப்பு ஒரு நிமிட வீடியோ போட்டியை அறிவித்துள்ளனர்.
திருச்சி மாநகர் சுற்றுலா தலங்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் அனைவரும் கலந்துக்கொள்ளலாம். ‘கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை’ மற்றும் ‘கோவில்கள் மற்றும் ஈர்ப்பு ‘ ஆகிய இரண்டு கருப்பொருள்களில் படமாக்கப்பட வேண்டும். இந்த காணொளிகளை www.trichytourism.in/contest/mesmerizing.trichy
இல் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு முன் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று திருச்சி சுற்றுலா கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments