திமுக சார்பில் மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுபவர்களை கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும்
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில் மூன்று இடங்களுக்கு திமுக வேட்பாளர்களும் மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள்நீதி மையத்திற்கு ஒரு இடமும்
ஒதுக்கப்படுகிறது. மக்கள் நீதி மையத்தின் சார்பாக போட்டியிடும் கவிஞர் சல்மா என்பவர் திருச்சி மாவட்டத்தின் துவரங்குறிச்சியை சேர்ந்தவர். இவர் 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் மருங்காபுரியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். மேலும் தமிழ்நாடு சமூக நல வாரிய தலைவியாகவும் பதவி வகித்தார்.
திமுக வேட்பாளராக வில்சன்,எஸ்.ஆர் சிவலிங்கம், மற்றும் மக்கள் நீதி மையத்தின் சார்பாக சார்பாக ரொக்கையா மாலிக் என்கின்ற கவிஞர் சல்மா ஆகிய மூவரும் போட்டியிட உள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments