திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குழுமணி அக்ரஹாரம் வசிக்கும் சக்திவேல் என்ற ஆட்டோ சக்தி (வயது 36) என்பவர் கடந்த (14. 02.2025 )ஆம் தேதி கொடியாலத்தில் உள்ள சந்திரசேகர் (வயது 47 )என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த
ரூபாய் 2350 பணத்தை பறித்துச் சென்றுள்ளார். இது சம்பந்தமாக அவர் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். Arms act வழக்குப்பதிவு செய்யப்பட்டு (15.02.2025 )ஆம் தேதி சக்திவேல் ஆட்டோ என்ற சக்திவேலை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி 1 இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி
பறிமுதல் செய்யப்பட்டது இந்நிலையில் ஆட்டோ சக்தி மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வ நாகரத்தினம் அவர்கள் பரிந்துரைத்தார். திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மேற்படி இவர் மீது தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments