கொரோனா முடக்கத்திற்கு பிறகு பல்வேறு தளர்வுகளில் கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில் கோவில்களில் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. இதனிடையே திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியிலுள்ள ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி ஆலயத்தில் காலை பூஜை செய்ய கோவிலை திறக்க வந்த பூசாரி கோவில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்ததில் அதிகாலை கோவிலில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
அதேநேரம் கருவறை உள்ளறையில் பாதுகாப்பு அதிகமாக இருந்ததால் சுவாமியின் தங்க நகைகள் திருடு போகாமல் தப்பித்தது. இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு உப்பிலியாபுரம் பகுதியில் உள்ள கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் சுவாமியின் 4 சவரன் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது மற்றொரு கோவில் திருட்டு சம்பவம் அரங்கேறி இருப்பது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கொலை சம்பவங்கள் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments