திருச்சி வெங்காயம் மண்டிக்கு நாள் ஒன்றுக்கு பெரிய வெங்காயம் 400 டன்னும், சின்ன வெங்காயம் 250 டன்னும் வருகிறது. சின்ன வெங்காயம் கிலோ 20 ரூபாயிலிருந்து அறுபது ரூபாய் வரையிலும் பெரிய வெங்காயம் 40 ரூபாயிலிருந்து கிலோ 70 ரூபாய் வரையிலும் மொத்த விற்பனையில் விற்கப்படுகிறது.
திருச்சி வெங்காய மண்டியை பொறுத்த அளவு சின்ன வெங்காயம் தற்போது நாள் ஒன்றுக்கு 400 டன் வர வேண்டி உள்ளது. திருச்சி வெங்காயம் மண்டியை பொறுத்த அளவு சின்ன வெங்காயம் பெரம்பலூர், துறையூர்,நாமக்கல் ஒட்டன்சத்திரம், திருப்பூர் மாவட்ட பகுதிகளிலிருந்து வருகிறது. பெரிய வெங்காயத்தை பொறுத்த அளவு கர்நாடகாவில் இருந்து மட்டுமே வருகிறது.
தரமான சின்ன,பெரிய வெங்காயம் கிலோ 70 ரூபாய் மொத்த விற்பனை ஏற்றுமதிக்கான விலை என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய வெங்காயம் 800 டன் வரவேண்டிய நிலையில் 400 டன் மட்டுமே வருகிறது. கர்நாடகாவில் மழைப்பொழிவு காரணமாக வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. திருச்சியில் ஜனவரி மாதத்திற்கு மேல் வெங்காயம் வரத்து அதிகரிக்கும்.
தற்பொழுது பருவமழை காரணமாக வெங்காயம் வரத்து குறைவாக வருகிறது. இதனால் விலை ஏற்ற இறக்கம் இருக்கும் என வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments