திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி பகுதியை சேர்ந்த மாணிக் சுபிக்ஷா, (21), த.பெ.ஸ்டான்லி, என்பவரின் தொலைபேசி எண்ணுக்கு கடந்த 06.09.2025 அன்று TRAI துறையிலிருந்து அழைப்பு வந்ததாகவும், அதில் மும்பை காவல் நிலையத்திலிருந்து பேசுவதாகவும், மாணிக் சுபிக்ஷாவின் தாய் மேரி தெரசா தெல்மா என்பவரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக மாணிக் சுபிக்ஷா என்பவரை மிரட்டி பணமோசடியில் ஈடுபட்டதாகவும், ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பாதிக்கப்பட்ட மாணிக் சுபிக்ஷா என்பவர் 07.10.2025 அன்று கொடுத்த புகாரின் பேரில் Cyber crime கா.நி.குற்ற எண். 19/25, U/s 318(4), 204 BNS & 66 D IT ACT-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி பயாஜ்தீன், (47), த.பெ.பாரூக் அலி, எண்.456, ஷாபாஸ் நகர், திண்டுக்கல் சாலை மேற்கு, பள்ளப்பட்டி, கரூர் மாவட்டம் என்பவர் 08.11.2025 அன்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே போன்று, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பாலமுருகன் (28), த.பெ. பொன்னன், என்பவர் கடந்த 04.11.2025 அன்று பாரதிநகரில் உள்ள கிரவுண்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது மணிகண்டன் நகரை சேர்ந்த நவீன் (28), (HS No. 02/25), த.பெ. ராமமூர்த்தி என்பவர் மேற்படி பாலமுருகனை வழிமறித்து, கையில் வைத்திருந்த அருவாளை காட்டி மிரட்டி, பாக்கெட்டில் இருந்த பணத்தை பிடுங்கி கொண்டு பாலமுருகனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்து சென்றதாகவும், பாதிக்கப்பட்ட பாலமுருகன் (28) என்பவர் கொடுத்த புகாருக்கு மணப்பாறை காவல் நிலைய குற்ற எண். 739/25, ச/பி 296(b), 126(2), 309(4), 311 BNS ன் படி 04.11.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, அன்றே எதிரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மேற்படி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் குற்றவாளிகளான பயாஜ்தீன் (47), த.பெ.பாரூக் அலி, எண்.456, ஷாபாஸ் நகர், திண்டுக்கல் சாலை மேற்கு, பள்ளப்பட்டி, கரூர் மாவட்டம், நவீன் (28), (HS No. 02/25), த.பெ. ராமமூர்த்தி, மணிகண்டன் நகர், மணப்பாறை தாலுகா, திருச்சி மாவட்டம் என்பவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று (09.12.2025) -ம் தேதி சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது
என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 110 குண்டர் தடுப்பு செய்யப்பட்டுள்ளது காவல் ஆணை
குறிப்பிடத்தக்கது பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments