Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

ஆன்லைன் ஆப்பு – படித்தவர்கள் மட்டுமே பலியாகின்றனர்

ஒவ்வொரு நாளும் அரசு பல்வேறு வழிகளில் ஊழல்கள் குறித்து மக்களுக்கு எச்சரித்தும் மக்கள் செவிசாய்க்கவில்லை. முன்பெல்லாம் கல்வியறிவு குறைந்தவர்கள் மோசடிகளுக்கு ஆளாகியிருந்தனர். ஆனால் ஆன்லைன் உலகில் படித்தவர்கள் மட்டுமே பலியாகின்றனர். தெரியாத லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என்று அரசு மற்றும் வங்கிகள் தரப்பில் இருந்து திரும்பத் திரும்ப கூறி வருகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வழிகளில் மோசடிகள் நடக்கின்றன. சில சமயம் முதலீடு என்ற பெயரிலும், சில சமயம் கஸ்டமர் கேர் என்ற பெயரிலும் இப்போது ஒரு புதிய மோசடி முறை உருவாகியுள்ளது. ஒரு ஆன்லைன் வகுப்பில் சேருவதற்கு ஒரு நபருக்கு இவ்வளவு செலவாகும் என்ற அழைப்பு ஆப்பாக மாறும் என அறிந்திருக்க மாட்டார் அந்த நபருக்கு ரூபாய் 64 லட்சம் காலி. இந்த சமீபத்திய ஆன்லைன் மோசடி வழக்கு விசாகப்பட்டினத்தில் நடந்து உள்ளது. இந்த மோசடி வாட்ஸ்அப் மூலம் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் என்ற வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினராக இருந்தார். மேலும் அவர் பங்குச் சந்தையில் சான்றிதழ் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்காக அதே குழுவிலிருந்து மற்றொரு குழுவில் சேர்க்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரிடம் பாதுகாப்பு என்ற பெயரில் பணம் கேட்டு, இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதலீடும் செய்யப்பட்டது. ரூபாய் 64 லட்சத்தை முதலீடு செய்த பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்தார். இதையடுத்து, இது குறித்து போலீசில் புகார் செய்தார். பின்னர்தான் விஷயமே வெளியே தெரிந்து இருக்கிறது. இரண்டு விஷயங்களில் கவனமாக இருங்கள் ஒன்று அளவுக்கு அதிகமான பணத்திற்கு ஆசைப்படாதீர்கள். மற்றொன்று தேவையில்லாத ஆப்களை டவுன்லோடு செய்து உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்துக்கொள்ளாதீர்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *