Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 10 விழுக்காடு மட்டுமே நிலம் கையகப்படுத்த வேண்டும் – எம்பி துரை வைகோ பேட்டி

நாடாளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி பன்னாட்டு விமான முனையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…

திருச்சி விமான முனையத்தின் ஆலோசனை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. விமான பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது, விமான சேவையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

கடந்த 2024 ஆம் ஆண்டு புதிய விமான முனையம் தொடங்கப்பட்டது. விமான முனையத்தின் ஓடுதளம் விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்காக 90 விழுக்காடு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 10 விழுக்காடு நிலத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு நீர்வளத்துறை உள்ளிட்ட சில துறையினரின் அனுமதி தேவைப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் இதுகுறித்து எடுத்துரைத்துள்ளேன். நிலத்தை கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்படும். அதில் 11 ஏக்கர் பட்டா நிலமாக உள்ளது. மீதமுள்ள 40 ஏக்கர் நிலத்திற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் அனுமதி கொடுக்க வேண்டி உள்ளது.

விமான ஓடுதளம் விரிவாக்கம் செய்யும் பணியில் எவ்வித தடையும் இல்லை. பிரதமர் மோடி திருச்சி விமான முனையத்திற்கு ஒரு பெரிய வானத்தில் வந்த இறங்கினார். பெரிய விமானம் திருச்சிக்கு வந்தது அதுவே முதல்முறை.

இமிகிரேஷன் சோதனையை முடித்துவிட்டு சில வினாடிகளில் பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியே வருவதற்கான முறை சென்னையில் உள்ளது. அது போன்ற ஒரு முறையை திருச்சியில் தொடங்கி வைத்துள்ளோம்.

டிரான்சிஸ் ஹப் ஆக திருச்சியை மாற்ற வேண்டி உள்ளது. அதற்கான கோரிக்கையை மத்திய விமானத்துறை அமைச்சரிடம் முன் வைத்துள்ளோம்.

இஸ்லாமிய பயணிகளுக்காக, விமான முனையத்தில் வருகை, புறப்பாடு உள்ளிட்ட மூன்று இடங்களில் வழிபாடு செய்வதற்கான தனி இடத்தை ஒதுக்கி உள்ளோம். விமான முனையத்தில் உணவகம், மருந்தகம் விரைவில் திறக்கப்படும்.

விமான முனையத்திற்குள் வாகன நெரிசலை குறைப்பதற்கு மூன்று சோதனை சாவடிகள் செயல்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். Fas tag முறையை அமுல்படுத்தவும் ஆலோசித்து வருகிறோம்.

ஹைதராபாத், பெங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு விமான சேவையை அதிகப்படுத்தவும், வெளிநாடுகளுக்கான விமான சேவையை கூடுதலாக்கவும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது.

கடைசி நேரத்தில் விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், சரக்குகளை கையாளும் கார்கோ சேவை தடைபடுகிறது. இதனை சரி செய்யவும் ஆலோசித்துள்ளோம். சரக்குகளை தனியாக கையாளுவதற்கு தேவையான விமானங்களை இயக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

விரிவாக்கம் செய்யப்பட்ட திருச்சி புதிய விமான முனையத்தை 25 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். அதனை முழுமையாக பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

திருச்சியில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

விமான போக்குவரத்தை கண்காணித்து வழிகாட்டும் ஏடிசி டவர் 46 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை என்பதால், இதனை 75 மீட்டர் உயரத்திற்கு உயர்த்திக் கட்ட திட்டமிட்டுள்ளோம்.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. அதற்கு தடையின்மை சான்று கேட்டுள்ளோம்.

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அணுகு சாலை அமைப்பதற்கு 618 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. தமிழக அரசு 84 கோடி ஒதுக்கி உள்ளது என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *