திருச்சியில் 50 சதவீத டீக்கடைகள் மட்டுமே இயங்குகின்றன! என்ன சொல்கிறார்கள் டீக்கடை வியாபாரிகள்?

திருச்சியில் 50 சதவீத டீக்கடைகள் மட்டுமே இயங்குகின்றன! என்ன சொல்கிறார்கள் டீக்கடை வியாபாரிகள்?

கொரோனா நோய் தாக்கத்திலிருந்து சில தளர்வுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.நேற்றிலிருந்து டீக்கடைகள் இயங்கலாம் என அறிவிப்பு வெளியாகியது.ஆனால் திருச்சியில் 50 சதவீத டீக்கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இது குறித்த தொகுப்பை காண்போம்.

ஒவ்வொருவருக்கும் பல பிரச்சனைகள் சோர்வுகள் சந்தோசங்கள் என அனைத்து இருந்தாலும் அது பல நேரங்களில் டீக்கடை தான் பலருக்கு மையப்புள்ளியாக இருக்கும்.இங்கு பலர் டீ பிரியர்களாக இருப்போம். சற்று நேரம் அந்தந்த டீக்கடையில் நின்று டீ குடித்துவிட்டு பலரும் அடுத்த கட்ட வேலைகளுக்கு செல்வோம். ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் கடைக்கு வர பலர் அச்சம் காட்டுகின்றனர்.

Advertisement

இதுகுறித்து டீக்கடை வியாபாரிகள் நலச்சங்கம் ரவுத்தர் ஷா அவர்கள் கூறுகையில் "தட்டில் சாப்பாட்டை போட்டு வைத்துவிட்டு சாப்பிடக்கூடாது என்பது போல செய்து வருகிறது இந்த அரசாங்கம். டீக்கடையில் பார்சல் மட்டுமே என்பதால் பலர் வருவதில்லை.இதற்கு வீட்டிலேயே சாப்பிட்டு விடலாமே. அதுவும் பார்சல் வழங்கினால் பிளாஸ்டிக் என அதுவும் வழங்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம்.எங்களுக்கு இப்போது இருக்கும் சூழ்நிலையில் சமூக இடைவெளிவிட்டு கடையிலேயே குடிக்கலாம் என்ன அறிவிப்பு வந்தால் நன்றாக இருக்கும்.

மேலும் கடை வைத்திருப்பவர்களுக்கு மாத வாடகை மற்றும் மின்சாரங்களில் தளர்வுகள் கண்டிப்பாக வேண்டும்.இல்லையென்றால் டீக்கடை வைத்திருக்கும் பலர் சொல்லொனாத் துயரத்தில் உள்ளாவார்கள்" என்கின்றார்