சிவகங்கை மாவட்டம் செல்லியம்பட்டி ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தன். வீரையா- தையல்நாயகி மகனான இவர். இப்போது விவசாயம் செய்து வருகிறார்.இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் மனிதன் குறிப்பிட்ட வயதிற்கு மேல் உயிர் வாழ்வானா? என்பதே கேள்விக்குறியாக இருக்கும் சூழ்நிலையில் தன்னுடைய கடின உழைப்பால்
80 வயதில் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான தடகளப் போட்டியில் 800 மீட்டர் 1500 மீட்டர் 5000 மீட்டர் 10,000 மீட்டர் ஆகிய போட்டிகளில் 75 லிருந்து 80 வயது பிரிவினருக்கான போட்டியில் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து முதலிடம் பிடித்து தங்க பதக்கங்களை பெற்று வருகிறார்.
கோவிந்தனை தொடர்பு கொண்டு பேசியபோது…
1955 ல் பொன்னமராவதி வலம்புரி பள்ளியில் தன்னுடைய ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். சிறுவயதிலிருந்தே ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட அளவில் கலந்து கொண்டு பரிசுகளை குவித்து வந்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு காரைக்குடியில் பொசளான் என்பவர் பத்திரிக்கை பார்த்து இது போல் இந்தியாவில் தடகளப் போட்டி நடக்க இருப்பதாகவும் அவரை சந்தித்து ஆலோசனைகளை கேட்டு அன்று களம் இறங்கியவர் தொடர்ந்து 2016, 2017, 2018, 2019 ஆகிய நான்கு வருடங்களாக தங்கப் பதக்கங்களை குவித்து வந்துள்ளார்.
தஞ்சாவூர், சென்னை, திருவள்ளூர், பெங்களூரு, கேரளா ஆகிய இடங்களில் நடைபெற்ற தடகளப் போட்டியிலும் கோல்டு தான்! மாவட்ட அளவில் கோல்டு, தமிழ்நாட்டிற்கு மூன்று கோல்டு!! இந்தியாவிற்கு இப்போது நாலு கோல்டு! என தங்க மகனாய் வலம் வருகிறார்.
80 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறீர்களே எவ்வாறு என்று கேட்டபோது” இதுநாள் வரையிலும் பீடி சிகரெட் தண்ணி பழக்கம் கிடையாது. கறி மீன் சாப்பிடுவது இல்லை. சைவம் மட்டும்தான். பால் மோர் நன்றாக விரும்பி சாப்பிடுவேன் என்று கூறுகிறார் புன்னகையுடன்..சமீபத்தில் மலேசியா செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக சிவகங்கை ஆட்சியரிடம் உதவி கோரினோம். அவர் எவ்வளவு செலவாகும் என்று கேட்டபோது 25 ஆயிரம் என்று கூறினோம். உடனே மூவருக்கும் ரூபாய் 25000 செக் போட்டு உடனே கொடுத்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
“மனிதனாய் பிறந்துவிட்டோம்” இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். வருகின்ற ஜனவரி வந்தால் 81 வயதாகிறது. இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு மட்டும்தான் பயணிக்கிறேன் என்று புன்னகையுடன் கூறுகிறார் கோவிந்தன்.
Comments