Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் VDart Malaysia Sdn Bhd (VDart) புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தொழில்நுட்ப வணிக வாய்ப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்யும் நோக்கத்துடன் பெர்ஜாயா Berjaya Corp Bhd (BCorp) மற்றும் VDart Malaysia Sdn Bhd (VDart) ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது தொழில்நுட்ப வணிகத்தை விரிவுபடுத்த கைகொடுக்கும் என்றும், இரு தரப்பினரும் ஒரு மூலோபாய கூட்டுறவை மேற்கொள்ள ஏதுவாக அமையும் என்றும் ‘பெர்ஜாயா கார்ப்’ கூட்டு குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சையத் அலி ஷாஹுல் ஹமீத் தெரிவித்துள்ளார்.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அதிநவீன தயாரிப்புகளை மேம்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகும் என்றார்.

“நுகர்வோர் தொடர்பான எங்களது சலுகைகளை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம். அதற்கேற்ப எதிர்வரும் ஆண்டுகளில் எங்களது மின்னிலக்க, தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களை விரிபடுத்த உள்ளோம்.

தொழில்நுட்பம்தான் மாற்றம், ,வளர்ச்சி ஆகியவற்றுக்கான கிரியா ஊக்கியாக உள்ளது. அனைத்துலக நுகர்வோர் குழுவாக உருமாற வேண்டும் எனும் எங்களுடைய பார்வையை, நோக்கத்தை VDart உடனான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் துரிதப்படுத்தும்,” என்றார் சையத் அலி.

பெர்ஜாயா கார்ப் தலைவர் டான்ஸ்ரீ வின்சென்ட் டான் சீ யியோன் Vincent Tan Chee Yioun முன்னிலையில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சையத் அலி கையெழுத்திட்டார்.

VDart-ஐ பிரதிநிதித்து அதன் தலைமைச் செயலதிகாரி சையட் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வில் பங்கேற்றார். அவர் VDart குழுமத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிகழ்வில் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முஹம்மத் இர்ஃபான் பீரான (Mohamed Irfan Peeran) கலந்து கொண்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….. https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…… https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *