திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. தற்போது அந்தநல்லூர் ஊராட்சி மாநகராட்சியாக மாற்ற அறிவிப்பு வெளியிட்ட நிலையில் பனையபுரம் ஊராட்சி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள மக்கள் அனைவருமே விவசாயம் மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சார்ந்து வாழ்கின்றனர். ஊராட்சியானது மாநகராட்சியாக மாற்றப்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மேலும் வரி உயர்வு ஏற்படும் இதனால் இங்குள்ள மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாவர். மத்திய அரசின் தரும் அழுத்தத்தால் மாநில அரசுஇத்தகைய முடிவுகள் எடுப்பதாகவும் மாநகராட்சியாக மாற்றப்பட்டால் இங்குள்ள மக்கள் மிகவும் சிரமப்படுவர். இந்த முடிவை உடனடியாக அரசு கைவிட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனுவை அளிக்க வந்தனர். மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மனுக்களை அதிகாரிகள் நேரடியாக பெற்றுக்கொள்ள முடியாத சூழலால் தங்களது கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments