அட்மா திட்டம் சார்பில் வெளி மாநில அளவில் அங்கக வேளாண்மை விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா.திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரத்தில் இருந்து அங்கக வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்து கொள்ள கர்நாடகா மாநிலத்தில் உள்ள வேளாண்மை
பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழ் மண்டல அலுவலகம் 10.03.2025 முதல் 14.03.2025 வரை 5 நாட்கள் கண்டுணர்வு சுற்றுலா சென்று அங்கக சாகுபடி தொழில் நுட்பங்கள், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை , பூச்சி கட்டுப்பாடு இயற்கை இடு பொருட்களை பயன்படுத்துதல் , களை மேலாண்மை,நீர் மேலாண்மை பற்றி நிலைய பேராசிரியர்கள் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் ஆராய்ச்சி நிலைய

குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக விளக்கி கூறினார்கள்.5 நாட்கள் நடைபெற்ற கண்டுணர்வு சுற்றுலாவில் சிறுமயங்குடி, மருதூர், மும்முடி சோழமங்கலம், நெய்க்குப்பை .T. கல்விகுடி , புதூர் உத்தமனூர் கிராமத்தில் இருந்து பல முன்னாடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இதற்கான ஏற்பாட்டினை லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி. சத்தியப்பிரியா ,
வேளாண்மை அலுவலர் கௌசல்யா, துணை வேளாண்மை அலுவலர் அய்யாசாமி, சந்திரசேகர், எடிசன், விஸ்வநாதன், ராஜசேகரன், கவிதா, பிரவீன் வேளாண்மை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு சபரி செல்வன் , உதவி தொழில் நுட்ப மேலாளர் திரு கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments